×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரூட்டை மாற்றின பாஜக... டெல்லியில் இருந்து களமிறக்கப்பட்ட முக்கிய புள்ளி! வானதி சீனிவாசனுக்கு புதிய பொறுப்பு...!!!

தமிழக பாஜகவின் புதிய மேலிட பொறுப்பாளராக ராம் மாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். நிர்மல் குமார் சுராணா, டி.கே. அருணா இணைப் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

தமிழக பாஜகவின் புதிய மேலிட பொறுப்பாளராக கட்சியின் தேசிய துணைத்தலைவர் ராம் மாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களுக்கான புதிய பொறுப்பாளர்கள் மற்றும் இணைப் பொறுப்பாளர்களை அறிவித்துள்ளார். தமிழகத்திற்கு ராம் மாதவுடன் இணைந்து செயல்பட இரு இணைப் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக பாஜகவுக்கு ராம் மாதவ் பொறுப்பு

பாஜக தேசிய துணைத்தலைவராக உள்ள ராம் மாதவ், தமிழகத்துடன் உத்தரகாண்ட் மாநிலத்திற்கும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக பாஜகவின் இணைப் பொறுப்பாளர்களாக நிர்மல் குமார் சுராணா மற்றும் டி.கே. அருணா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: இப்படி ஒரு பிளானா? இடைத்தேர்தலில் பாமக விலகலுக்கு பின்னால் தவெக! ஜான் ஆரோக்கியசாமியை வைத்து CM விஜய் போட்ட ஸ்கெட்ச்... தலை ஆட்டிய அன்புமணி! அம்பலமான அரசியல் உண்மை...!!!

தென் மாநிலங்களிலும் புதிய நியமனங்கள்

தமிழகத்தைத் தொடர்ந்து தென்னிந்தியாவின் பிற மாநிலங்களிலும் முக்கிய நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கேரள மாநிலத்தின் இணைப் பொறுப்பாளராக எம்.வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தின் இணைப் பொறுப்பாளராக வானதி சீனிவாசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அமைப்பு பணிகளை வேகப்படுத்தும் நடவடிக்கை

நாடு முழுவதும் கட்சியின் அமைப்பு பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த புதிய பொறுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களை கருத்தில் கொண்டு மூத்த நிர்வாகிகளுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ராம் மாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடன் இணைப் பொறுப்பாளர்கள் இணைந்து கட்சியின் மாநில அளவிலான பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

 

இதையும் படிங்க: நிர்வாக மாற்றதுக்கு எதிர்ப்பு! CM விஜக்கு கோரிக்கை விடுத்து... லைவ் வீடியோவில் விஷம் குடித்த தவெக நிர்வாகி..! திமுக-வில் விலகி வந்தவர்க்கு தவெக வழக்கிய அந்த பொறுப்பு தான் காரணமே...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ராம் மாதவ் #Tamil Nadu BJP #பாஜக பொறுப்பாளர் #Nitin Nabin #டி.கே. அருணா
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story