×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நிர்வாக மாற்றதுக்கு எதிர்ப்பு! CM விஜக்கு கோரிக்கை விடுத்து... லைவ் வீடியோவில் விஷம் குடித்த தவெக நிர்வாகி..! திமுக-வில் விலகி வந்தவர்க்கு தவெக வழக்கிய அந்த பொறுப்பு தான் காரணமே...!!!

தூத்துக்குடியில் தவெக நிர்வாக மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய இளைஞரணி நிர்வாகி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தூத்துக்குடியில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாக மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒன்றிய இளைஞரணி நிர்வாகி முத்துக்குமரன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். கட்சியில் நீண்டகாலமாகப் பணியாற்றியவர்களைப் புறக்கணித்து, மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக விஜய்க்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்ட பின்னர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

நிர்வாக மாற்றத்துக்கு எதிர்ப்பு

தூத்துக்குடி புறநகர் மாவட்ட தவெக நிர்வாகத்தில் சமீபகாலமாக சில மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி தெற்கு ஒன்றியச் செயலாளர் பதவியில் இருந்த குழந்தை ராஜா நீக்கப்பட்டு, திமுகவில் இருந்து தவெகவில் இணைந்த பாரத் என்பவர் புதிய பொறுப்பில் நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கொளத்தூர் MLA VS பாபு எப்படி உள்ளார்? மருத்துவக் குழுவின் தீவிர கண்காணிப்பில்...! மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை.!!!

இந்த பதவி மாற்றத்துக்கு குழந்தை ராஜாவின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களில் ஒருவரான ஒன்றிய இளைஞரணிச் செயலாளர் முத்துக்குமரன், விஷம் அருந்தியதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

விஜய்க்கு முத்துக்குமரன் விடுத்த கோரிக்கை

வைரலாகி வரும் வீடியோவில் பேசியுள்ள முத்துக்குமரன், 2000-ம் ஆண்டு முதல் விஜய்யின் தீவிர ரசிகராக இருந்து வருவதாகவும், கட்சி தொடங்கிய பின்னரும் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி புறநகர் மாவட்டம், ஒட்டப்பிடாரம் தொகுதி தவெக நிர்வாகத்தில் நடைபெறும் குளறுபடிகள் குறித்து பலமுறை மின்னஞ்சல் மூலமும், நேரில் சந்திக்க முயன்றும் புகார் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

மேலும், தேர்தலுக்குப் பிறகு திமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படுவதாகவும், இதனால் கட்சியின் நிர்வாகம் குறித்து தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதனால் தவெக உட்கட்சிப் பூசல் தொடர்பான விவாதம் கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.

அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

விஷம் அருந்திய முத்துக்குமரன் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, நடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கட்சியின் மாவட்ட நிர்வாகத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் மற்றும் முத்துக்குமரன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் விசாரணை நடைபெறுவதாக கூறப்படுகிறது. தூத்துக்குடி தவெக நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள இந்த சர்ச்சைக்கு கட்சி தலைமையிடம் இருந்து என்ன விளக்கம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: 50 க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோ...! மணிகண்டன் வெறும் சின்ன கை தான்... பின்னணியில் இருக்கும் பெரிய கும்பல்? ரகுபதி போட்ட பகீர் குண்டு...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#தூத்துக்குடி தவெக #TVK internal dispute #முத்துக்குமரன் #விஜய் தவெக #தற்கொலை முயற்சி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story