"இப்பவும் ஒன்னும் கெட்டு போகல".. ராகுல் காந்தி போட்ட பக்கா ஸ்கெட்ச்.!
இப்பவும் ஒன்னும் கெட்டு போகல.. ராகுல் காந்தி போட்ட பக்கா ஸ்கெட்ச்.!
சட்டமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கிய தருணத்திலிருந்தே காங்கிரஸ் தரப்பு தெளிவான நிலைப்பாட்டில் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால், இந்த முறை அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுகவுடன் வெறும் கூட்டணியாக இல்லாமல், ஆட்சியிலும் அதிகாரத்திலும் நேரடி பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் முன்வைத்தது. துணை முதல்வர் பதவி, முக்கிய அமைச்சகங்கள் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபோன்ற நிலைமை இதற்கு முன்பு காணப்படவில்லை.
இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நடிகர் விஜயை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இது சாதாரண சந்திப்பு அல்ல, எதிர்கால அரசியல் மாற்றத்திற்கான முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது. மேலும், விஜய் ஒரு சாதாரண நடிகர் அல்ல, தவிர்க்க முடியாத அரசியல் சக்தி என காங்கிரஸ் தரப்பிலிருந்து வெளிப்படையாக பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்! தவெக கட்சியுடன் கூட்டணி இல்லை..... விஜய்க்கு ஷாக் கொடுத்த முக்கிய பிரபலம்.!
தமிழகத்தில் தன் நிலையை வலுப்படுத்த வேண்டுமெனில், விஜயுடன் கூட்டணி அமைப்பதே சரியான முடிவு என ராகுல் காந்தி கருதியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. தமிழக வெற்றி கழகம் 100+ மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று, ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை உறுதியாக்கியுள்ளது.
மீதமுள்ள சில தொகுதிகளை கைப்பற்றுவதற்காக கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. அந்த வகையில், விஜய் தரப்பிலிருந்து காங்கிரஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கைப்பற்றிய தொகுதிகள், ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என மதிப்பிடப்படுகிறது. இந்த சூழ்நிலையில், ராகுல் காந்தி மேலும் தாமதிக்காமல் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
திமுக கூட்டணியில் நீடிப்பதா அல்லது புதிய கூட்டணிக்குத் திரும்புவதா என்ற கேள்வி எழுந்துள்ளது. "இப்போதும் எதுவும் கெட்டுப் போகவில்லை; ஆனால் இனி தாமதிக்கக் கூடாது" என்ற நிலைப்பாட்டில் அவர் உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக அரசியலில் அடுத்த சில நாட்களில் முக்கிய திருப்பம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
இதையும் படிங்க: பாஜகவுக்கு டாடா காட்டிட்டு.. விஜயுடன் கூட்டணி அமைத்து.. ஆட்சியை பிடிக்க திட்டம்.?!