பாஜகவுக்கு டாடா காட்டிட்டு.. விஜயுடன் கூட்டணி அமைத்து.. ஆட்சியை பிடிக்க திட்டம்.?!
பாஜகவுக்கு டாடா காட்டிட்டு.. விஜயுடன் கூட்டணி அமைத்து.. ஆட்சியை பிடிக்க திட்டம்.?!
புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமிக்கு துணை முதல்வர் (DCM) பதவியை குறி வைத்து பாஜக தரப்பில் அதிக அழுத்தம் தரப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், ரங்கசாமி அதிருப்தியில் உள்ளதாகவும், கூட்டணியில் இருந்து வெளியேற முடிவெடுத்துள்ளதாகவும் இந்த விஷயம் புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பாஜக அமைச்சரவையில் கூடுதல் இடங்களை கோர திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிகாரத்தை மேலும் விரிவுபடுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. இதனால் கூட்டணி உறவில் பதற்றம் அதிகரித்து வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும், வெற்றி வாய்ப்பு உள்ள சுயேச்சை வேட்பாளர்களுடன் பாஜக முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நகர்வுகள் கூட்டணி அரசியலில் புதிய மாற்றங்களை உருவாக்கக்கூடும். இது அரசியல் கணக்கீடுகளை மேலும் சிக்கலாக்கியுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் என். ரங்கசாமியை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. பாஜக மீது அதிருப்தி அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், கூட்டணியில் உடையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: கெத்து காட்டும் ஸ்டாலின்! திமுக கூட்டணியில் ஒரே நேரத்தில் இணையும் இரண்டு கட்சிகள்.....! சூடுபிடிக்கும் அரசியல் களம்!
அதாவது என்.ரங்கசாமி பாஜவுடனான தனது கூட்டணியை உடைத்து கொண்டு, நடிகர் விஜய் தலைமையிலான தவெக கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்கலாமா என ஆலோசனை செய்து கொண்டு இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. இருப்பினும், இவை அனைத்தும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாதவை. அரசியல் நிலைமைகள் எப்போது வேண்டுமானாலும் மாறக்கூடியவை. அதனால் அடுத்தடுத்த நகர்வுகள் புதுச்சேரி அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
இதையும் படிங்க: BREAKING: டெல்லி கூட்டத்தில் கூட்டணி குறித்த முடிவை அறிவித்த காங்கிரஸ் கட்சி! பரபரப்பில் அரசியல் களம்!