×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மைக் கிடைத்தால் எதையும் பேசலாமா?திமுகவினருக்கு பிரேமலதா விஜயகாந்த் சரமாரி கேள்வி!

மைக் கிடைத்தால் எதையும் பேசலாமா?திமுகவினருக்கு பிரேமலதா விஜயகாந்த் சரமாரி கேள்வி!

Advertisement

திமுக ஆர்ப்பாட்டத்தில் ஆபாசமாகவும், தனிப்பட்ட முறையிலும் பேசியதாக கூறப்படும் திமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தது சரியான முடிவு என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிகவின் 22-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுகவினர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக தனது கருத்தை தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், ஆர்ப்பாட்டத்தில் தனிப்பட்ட முறையில் ஆபாசமாகப் பேசியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது சரியான முடிவுதான் என்றார். மேலும், ஒருவரின் பெற்றோர் குறித்து பொதுவெளியில் தரக்குறைவாக பேசுவதை ஏற்க முடியாது என்றும், மைக் கிடைத்துவிட்டது என்பதற்காக எதையும் பேசக்கூடாது என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: யாருகிட்ட உங்க ஆட்டம்லாம்...? அடுத்தடுத்து அதிரடி காட்டும் முதல்வர் விஜய்! ஆபாச பேச்சு ஆ.ராசா மீது 7 பிரிவுகளின் கீழ் போலீஸ்சார் வழக்கு பதிவு!!!!!

பொதுவெளியில் பேசும்போது வார்த்தைகளை கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் பிரேமலதா வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், அரசியல் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் குறித்து பேசும்போது நாகரிகமான முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: BREAKING: திமுகவில் அடுத்த அவதூறு பேச்சில் சிக்கிய சேகர்பாபு! இரவோடு இரவாக நடந்த சம்பவம்… பரபரப்பில் தமிழக அரசியல்...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#DMK Protest #DMK rasa #dmdk #premalatha Vijaykanth #thirumavalavan
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story