×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

யாருகிட்ட உங்க ஆட்டம்லாம்...? அடுத்தடுத்து அதிரடி காட்டும் முதல்வர் விஜய்! ஆபாச பேச்சு ஆ.ராசா மீது 7 பிரிவுகளின் கீழ் போலீஸ்சார் வழக்கு பதிவு!!!!!

முதல்வர் விஜய்யை ஆபாசமாக விமர்சித்த ஆ.ராசா.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!

Advertisement

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் மற்றும் திமுக இடையே கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில், முதல்வர் விஜய் குறித்து ஒருமையில் பேசியதாக கூறி திமுக எம்.பி. ஆ.ராசா மீது சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய முதல்வர் விஜய், திமுக ஆட்சிக் காலத்தில் சர்ச்சைக்குள்ளானதாக கூறப்படும் சர்க்காரியா கமிஷன் அறிக்கை, வீராணம் திட்டம் உள்ளிட்ட விவகாரங்களையும், அமலாக்கத்துறை தொடர்பான ஆவணங்களையும் குறிப்பிட்டு திமுகவினருக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

மேலும், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்தும் முதல்வர் விஜய் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது, மு.க.ஸ்டாலினை கேலி செய்யும் வகையில் முதல்வர் விஜய் உடல்மொழியைப் பயன்படுத்தியதாக திமுகவினர் குற்றம்சாட்டி கண்டனம் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: உங்கள் குடும்பத்தினரிடம் காட்ட முடியுமா?.. ஆ.ராசா பேச்சுக்கு அமைச்சர் நிர்மல் குமார் கடும் கண்டனம்!

இதனைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவமதிக்கும் வகையில் முதல்வர் விஜய் பேசியதாகக் கூறி, அவரைக் கண்டித்து திமுக சார்பில் கடந்த 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா கலந்து கொண்டு முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்துப் பேசினார். அவரது பேச்சுக்கு தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், ஆ.ராசாவின் பேச்சு தொடர்பாக தவெக நிர்வாகி ஒருவர் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில், ஆ.ராசா மீது பொது இடத்தில் ஆபாசமாகப் பேசுதல், அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் அவமதித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக சைதாப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்வர் விஜய் மற்றும் திமுக இடையேயான அரசியல் மோதல் தொடர்ந்து வரும் நிலையில், ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பாஜக ஆ. ராசா? திமுக எச்.ராஜா? என்ன வித்தியாசம் இருக்கிறது?.. வன்னி அரசு கடும் விமர்சனம்!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#DMK rasa #TVK Vijay #DMK Protest #dmk #TVK
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story