×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"2031-ல் பாமக ஆட்சி... அய்யா வாழும் காலத்திலேயே.. கனவை நிறைவேற்றுவோம் ." அன்புமணி உருக்கம்.!

2031-ல் பாமக ஆட்சி... அய்யா வாழும் காலத்திலேயே.. கனவை நிறைவேற்றுவோம் . அன்புமணி உருக்கம்.!

Advertisement

மகாபலிபுரத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உற்சாக உரையாற்றினார். அந்த உரையில், பாமகவின் எதிர்கால அரசியல் இலக்கை தெளிவாக எடுத்துரைத்தார்.

"மருத்துவர் அய்யா வாழும் காலத்திலேயே பாமக தமிழ்நாட்டை ஆள வேண்டும்" என்பதே அனைவரின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று அன்புமணி தெரிவித்தார். நிறுவனர் டாக்டர் ராமதாஸின் கனவை நனவாக்கும் பொறுப்பு ஒவ்வொரு நிர்வாகிக்கும் இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், 2031 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக ஆட்சியை அமைக்கும் வகையில் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் இப்போதே களப்பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அன்புமணி வலியுறுத்தினார். கிராமம் முதல் நகரம் வரை கட்சியை வலுப்படுத்தும் பணியில் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: BREAKING: தேமுதிகவின் தேர்தல் தந்திரம்! பிரேமலதா முடிவால் அரசியல் களத்தில் புதிய பரபரப்பு!

அன்புமணியின் இந்தப் பேச்சு பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. 2031-ல் பாமக ஆட்சியை அமைப்பதே கட்சியின் முக்கிய அரசியல் இலக்கு என்ற அவரது அறிவிப்பு, அரசியல் வட்டாரங்களிலும் கவனம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: பாமக தொண்டர்கள் செய்த செயல்.. உடனே கண்டித்து அன்புமணி சொன்ன வார்த்தை.. பொதுக்குழு கூட்டத்தில் விறுவிறுப்பு.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#pmk #anbumani ramadoss #Ramadoss #politics news #Mamallapuram
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story