×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பாமக தொண்டர்கள் செய்த செயல்.. உடனே கண்டித்து அன்புமணி சொன்ன வார்த்தை.. பொதுக்குழு கூட்டத்தில் விறுவிறுப்பு.!

பாமக தொண்டர்கள் செய்த செயல்.. உடனே கண்டித்து அன்புமணி சொன்ன வார்த்தை.. பொதுக்குழு கூட்டத்தில் விறுவிறுப்பு.!

Advertisement

மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில், அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக கட்சியின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதனுடன், கட்சியின் பல்வேறு நிர்வாகப் பொறுப்புகளுக்கும் புதிய நியமனங்கள் மற்றும் பொறுப்பு மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன.

அன்புமணி தலைவராக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கூட்டத்தில் கலந்துகொண்ட பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக கோஷங்களை எழுப்பினர். அப்போது, "பாமகவின் நிரந்தர தலைவர் அன்புமணி" என்று முழக்கமிட்டதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து உடனடியாக மைக்கை எடுத்துப் பேசிய அன்புமணி ராமதாஸ், அந்த கோஷத்தை ஏற்க மறுத்தார். "பாமகவில் நிரந்தர தலைவர் என்று யாரும் இல்லை. நமது கட்சி ஒரு ஜனநாயகக் கட்சி" என்று கூறி, அத்தகைய முழக்கங்களை இனி எழுப்ப வேண்டாம் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: BREAKING: சற்று முன்.... திடீர் ட்விஸ்ட்! கூட்டணி இல்லை..... ராமதாஸ் அறிவிப்பால் பரபரப்பில் அரசியல் கலம் !!!

மேலும், இனிமேல் தன்னை "நிரந்தர தலைவர்" என்று யாரும் குறிப்பிட வேண்டாம் என்றும், கட்சியின் கொள்கைகளும் நடைமுறைகளும் ஜனநாயக அடிப்படையிலேயே செயல்படும் என்றும் அவர் வலியுறுத்தினார். அன்புமணியின் இந்தப் பேச்சு, பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் மத்தியில் கவனம் பெற்றது.

இதையும் படிங்க: இப்படியே போன அதிமுக நிலைமை தான் என்ன? எடப்பாடிக்கு அடுத்த ஷாக்.... அதிருப்தியால் நடக்கும் அதிரடி அரசியல் மாற்றம்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#pmk #anbumani ramadoss #Mamallapuram #politics news #Ramadoss #PMK meeting
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story