திடீர் ட்விஸ்ட்...! இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை...! பாமக தலைவர் அன்புமணி ராமாதாஸ் அதிரடி அறிவிப்பு..! அதிமுக கூட்டணிக்கு விழுந்த பேரிடி...!!!
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். அதிமுக உறவிலும் புதிய திருப்பம்.
தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். பல முனைப் போட்டி நிலவும் சூழலில் பாமகவின் இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
குறிப்பாக மதுராந்தகம் தொகுதியில் பாமகவுக்கு கணிசமான வாக்கு ஆதரவு இருப்பதால், அந்தக் கட்சியின் நிலைப்பாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதிமுக தரப்பில் ஆதரவைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அன்புமணி யாருக்கும் ஆதரவு இல்லை என்ற முடிவை எடுத்துள்ளார்.
இதையும் படிங்க: ராமதாஸ் போட்ட ஒரு ஃபோன் கால்....! சட்டப்பேரவையே தெறிக்கவிட்ட சௌமியா அன்புமணி.... முதல்வர் விஜய்யை சிந்திக்க வைத்த அந்த தருணம்!!!
அதிமுக கூட்டணி குறித்து பாமக நிர்வாகிகள் அதிருப்தி
இந்த முடிவுக்குப் பின்னணியில் பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எழுந்த கருத்துகள் முக்கிய காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதிமுக உடனான கூட்டணியால் கட்சிக்கு கிடைத்த பலனைவிட ஏற்பட்ட பாதிப்புகளே அதிகம் என பல நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வென்ற 47 தொகுதிகளில் சுமார் 36 தொகுதிகள் பாமகவின் வலுவான பகுதிகளில் அமைந்திருந்ததாக நிர்வாகிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதே நேரத்தில், சேலம் மாவட்டத்தில் பாமக நேரடியாகப் போட்டியிட்ட மேற்கு மற்றும் வடக்குத் தொகுதிகளில் அதிமுக தரப்பிலிருந்து எதிர்பார்த்த அளவு உள்ளூர் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கூட்டணி தோழமைக்கு உரிய மரியாதை இல்லை என புகார்
தேர்தலுக்குப் பிறகு கூட்டணிக் கட்சியான பாமகவுக்கு அதிமுக தலைமை போதிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்ற ஆதங்கமும் கூட்டத்தில் வெளிப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக வெற்றி பெற்ற பின்னர் கட்சி நிர்வாகிகளை முறையாக அணுகவில்லை என்பதும் அவர்களின் புகாராக இருந்துள்ளது.
நிர்வாகிகளின் இந்த கருத்துகளைத் தொடர்ந்து, அதிமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்ற முடிவை அன்புமணி ராமதாஸ் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாமக முடிவு இடைத்தேர்தல் களத்தில் புதிய அரசியல் கணக்குகளுக்கு வழிவகுக்கும் சூழல் உருவாகியுள்ளது.
தவெக கூட்டணியா? அடுத்த நகர்வு மீது கவனம்
அதிமுகவுடனான உறவில் இடைவெளி அதிகரித்துள்ள நிலையில், அடுத்ததாக பாமக எந்த அரசியல் பாதையைத் தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக தவெக அணியுடன் பாமக இணைவதற்கான வாய்ப்பு குறித்தும் அரசியல் வட்டாரங்களில் விவாதம் தொடங்கியுள்ளது.
எனினும், தவெக கூட்டணியில் ஏற்கனவே விசிக இடம்பெற்றுள்ளதால், பாமக அந்த அணியில் இணைவதில் சில அரசியல் சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்ற பாமகவின் நிலைப்பாடு, அன்புமணி ராமதாஸ் தலைமையிலான கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை கவனிக்க வைத்துள்ளது.
இதையும் படிங்க: தவெக பக்கம் வந்துவிட்டு வீர வசனமா? அடக்கி வாசியுங்கள்.. காங்கிரஸ், விசிகவை கடுமையாக சாடிய அன்புமணி!