×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"அப்பவே செங்கோட்டையன் பேச்சை கேட்டிருக்கலாம்." குமுறும் ஓ.பி.எஸ்.?!

அப்பவே செங்கோட்டையன் பேச்சை கேட்டிருக்கலாம். குமுறும் ஓ.பி.எஸ்.?!

Advertisement

சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் கடும் போட்டிக்குப் பிறகு வெற்றி பெற்றார். நீண்ட காலமாக அதிமுகவில் முக்கிய தலைவராக இருந்த அவர், கட்சியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசியல் எதிர்காலம் குறித்து பல்வேறு ஆலோசனைகளில் ஈடுபட்டார். அதன் பின்னரே திமுகவில் இணைந்து தற்போது சட்டப்பேரவை உறுப்பினராக மாறியுள்ளார்.

அரசியல் வட்டாரங்களில் வெளியாகும் தகவல்களின் படி, திமுகவில் சேர்வதற்கு முன்பாக செங்கோட்டையன் ஓ.பன்னீர்செல்வத்தை தமிழக வெற்றி கழகத்தில் இணைக்க பலமுறை முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அப்போது பல்வேறு காரணங்களால் ஓ.பன்னீர்செல்வம் அதற்கு சம்மதம் தெரிவிக்காமல் இருந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னரே அவர் திமுகவை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.

ஆனால் தற்போது அந்த முடிவே அவருக்கு மனவேதனையை ஏற்படுத்தி இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. தமிழக வெற்றி கழகத்தில் இணைந்திருந்தால் இந்நேரம் தனக்கும் அமைச்சர் பதவி கிடைத்திருக்கும் என அவர் நெருங்கிய வட்டாரங்களில் வருத்தம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால், அவரது தற்போதைய அரசியல் நிலைப்பாடு குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.

இதையும் படிங்க: மத்திய அமைச்சராகும் BJP அண்ணாமலை.?! சற்றுமுன் கசிந்த தகவல்.!

திமுகவில் தற்போது முக்கிய பொறுப்புகள் அனைத்தும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், ஓ.பன்னீர்செல்வத்திற்கு உடனடி முக்கியத்துவம் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பெரிய அரசியல் நகர்வு எதையும் மேற்கொள்ள முடியாத சூழ்நிலைக்குள் அவர் தள்ளப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“செங்கோட்டையன் கூறியதை அன்றே கேட்டிருக்கலாம்” என ஓ.பன்னீர்செல்வம் தனக்கு நெருக்கமானவர்களிடம் வருத்தப்பட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் அவரது அரசியல் பயணத்தில் புதிய திருப்பம் ஏற்படுமா என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: #Breaking : டெல்லிக்கு புறப்பட்ட சிவி சண்முகம்.! அடுத்தடுத்து நடக்கவுள்ள அதிரடிகள்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ops #eps #Admk #KA Sengottaiyan
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story