×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தன் மகனையே ஒழுங்கா வளர்க்கல... அப்புறம் எப்படி கட்சியை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பார்? ஆபாசம் மற்றும் அவதூறு தான் திமுகவின் கலாச்சாரம்..! அமைச்சர் ரமேஷ் சரமாரி விமர்சனம்!!!

ஆபாசம் மற்றும் அவதூறு தான் திமுகவின் கலாச்சாரம்.. அமைச்சர் ரமேஷ் சரமாரி விமர்சனம்!

Advertisement

தமிழக அரசியல் களத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான வார்த்தைப் போர் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முதலமைச்சர் விஜய்யின் வெளிநாட்டுப் பயணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருந்த நிலையில், அதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பதிலளித்துள்ளார். மேலும், தி.மு.க முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவின் பேச்சு குறித்தும் அவர் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ரமேஷ், அரசியல் நாகரிகம் இல்லாமல் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசக்கூடாது. பொறுப்புள்ள தலைவர்கள் பேசும்போது அரசியல் முதிர்ச்சியுடன் பேச வேண்டும் எனக் கூறினார். பொறுப்பற்ற மற்றும் வரம்பு மீறிய பேச்சுகளால்தான் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தலில் எதிர்க்கட்சி வரிசைக்கான வாய்ப்பு கூட கிடைக்காமல் போனதாகவும் அவர் விமர்சித்தார்.

தி.மு.க.வினரின் மேடைப் பேச்சுகள் குறித்தும் அமைச்சர் ரமேஷ் கடுமையாக விமர்சித்தார். ஆபாசம் மற்றும் அவதூறு கலந்த பேச்சுகள் தி.மு.க.வின் அரசியல் கலாசாரமாக மாறிவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார். உதயநிதி ஸ்டாலின் தொடங்கி முன்னாள் அமைச்சர் சேகர்பாபு வரை, அவர்களின் பேச்சுகளில் அரசியல் அறம் இல்லை என்றும், இப்படிப்பட்ட பேச்சுகளைக் கொண்ட ஒருவர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்தது எப்படி என்றும் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: “அவதூறுக்கும் மிரட்டலுக்கும் அஞ்சமாட்டோம்”.. திமுகவை விளாசிய அமைச்சர் ரமேஷ்!

மேலும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினையும் விமர்சித்த அமைச்சர் ரமேஷ், தனது மகனையே ஒழுங்காக வளர்க்க முடியாதவர், கட்சியினரை எப்படி கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பார்? என கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை சமீபத்தில் ஏற்பட்டது போல் ஆளும் கட்சி பேசக்கூடாது என்றும், கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க.ணண ஆட்சியின் சட்டம்-ஒழுங்கு நிலையை திரும்பிப் பார்த்த பிறகே பிறரை விமர்சிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: எப்போவுமே இல்லாமல் அப்போ அப்போ அதிரடி காட்டும் அண்ணாமலை! லண்டனில் போட்ட குண்டால் பதறும் கோட்டை வட்டாரம்! அரசியலில் அடுத்த டுவிஸ்ட்...!!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#TVK Ramesh #TVK #dmk #eps #sekar babu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story