×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிமுகவுக்கு புதிய ஆபத்து.! செங்கோட்டையன் ஸ்கெட்ச்.. வெடிக்கப் போகும் ரிசார்ட் அரசியல்.?!

அதிமுகவுக்கு புதிய ஆபத்து.! செங்கோட்டையன் ஸ்கெட்ச்.. வெடிக்கப் போகும் ரிசார்ட் அரசியல்.?!

Advertisement

வரவிருக்கும் தேர்தல் முடிவுகள், அதிமுக-க்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும், எதிர்பாராத அரசியல் சிக்கல்களையும் உருவாக்கக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. தவெக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 118  தொகுதிகள் தேவைப்படுகிறது. ஆனால் இதுவரை 100+ தொகுதிகள் வரை மட்டுமே முன்னிலைப் பெறும் சூழல் நிலவுகிறது. இதனால், தேவையான எண்ணிக்கையை எட்ட தவெக சார்பில் ஒரு  பயங்கரமான திட்டம் உள்ளதாம்.

அதிமுகவின் முன்னாள் முக்கிய நிர்வாகியாக இருந்தவர் செங்கோட்டையன். அவரது செல்வாக்கை பயன்படுத்தி வெற்றி வாய்ப்புள்ள சில அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை குறிவைத்து, பின்னணியில் தீவிரமான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றனவாம். மேலும் அதிர்ச்சிகரமாக, இந்த பேச்சுவார்த்தைகள் தேர்தல் முடிவுகள் அறிவிப்பிற்கு முன்பே தொடங்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

அதிமுகவிலிருந்து வெற்றி பெறும் சிலரை தவெக பக்கம் திருப்பும் திட்டம் எந்த அளவு கை கொடுக்கும் என்பது தெரியவில்லை. இந்த சூழ்நிலையானது, 2017-ல் தமிழகம் கண்ட கூவத்தூர் ரிசார்ட் சம்பவம் போன்ற அரசியல் அதிர்வுகளை மீண்டும் நினைவூட்டுகிறது. அதுபோன்ற “ரிசார்ட் அரசியல்” மீண்டும்  அரங்கேருமா? என்ற அச்சம் அரசியல் வட்டாரங்களில் தெளிவாக உணரப்படுகிறது.

இதையும் படிங்க: திமுக வின் புதிய அரசியல் வியூகம்! ஓபிஎஸ்ஸை வைத்து ஸ்டாலின் போட்ட மாஸ்டர் பிளான்! எடப்பாடிக்கு அடுத்து காத்திருக்கும் பேரதிர்ச்சி..!!!

இந்த தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில், அது ஒரு சாதாரண அரசியல் மாற்றமாக மட்டும் இருக்காது. அதிமுகவின் உள்கட்டமைப்பையே குலைக்கும் அளவுக்கு பெரிய அதிர்ச்சியாக மாறக்கூடும். கட்சிக்குள் உடைப்பு, அதிகாரப் போட்டி, மற்றும் எதிர்கால தலைமை குறித்து பெரிய கேள்விக்குறிகள் எழும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.

இதையும் படிங்க: "இது நடந்தா விஜய் முக்காடு போட்டுட்டு கிளம்பிடுவாரு.!" அரசியல் வட்டாரங்களில் கசியும் செய்தி.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Admk #TVK #Election 2026 #sengottaiyan #Edappadi k palanisamy
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story