×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொளத்தூர் எம்.எல்ஏ உடல்நிலை நிலவரம்? மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!

கொளத்தூர் எம்.எல்ஏ உடல்நிலை நிலவரம்? மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!

Advertisement

கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை மீண்டும் விளக்கம் அளித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வி.எஸ். பாபு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவரது உடல்நிலை தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது. இதனால் அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சியினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகம் மீண்டும் விளக்கம் அளித்துள்ளது. அதில், வி.எஸ். பாபுவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்களின் கண்காணிப்பில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திடீர் மூச்சுத்திணறல்… ICU-வில் கொளத்தூர் எம்எல்ஏ! மருத்துவர்கள் தீவிர சிகிச்சை!

மேலும், அவரது உடல்நிலை குறித்து வெளியாகும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், மருத்துவமனை தரப்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் தகவல்களை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வி.எஸ். பாபுவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை மீண்டும் தெரிவித்துள்ள தகவல், அவரது குடும்பத்தினர், கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சற்று முன்... மூச்சுத்திணறலால் வெண்டிலேட்டர் உதவியுடன் VS பாபுவுக்கு சிகிச்சை! மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை....!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kolathur MLA #VS Babu #TVK MLA #MGM hospital
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story