நாங்களே சொல்லி சொல்லி ஆட்சி நடத்துவதற்கு... அப்போ திமுகவெ ஆட்சியில் இருக்கலாமே..? தவெக அரசை கிழித்து தள்ளிய கனிமொழி எம்.பி..!!!
செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறிய கனிமொழி, தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை என தவெக அரசைக் கடுமையாக விமர்சித்தார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் மாயமான சிறுமியின் குடும்பத்தினரைச் சந்தித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை என தவெக அரசைக் கடுமையாக விமர்சித்தார். சிறுமி மாயமான வழக்கில் விசாரணை தாமதமானது குறித்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
சிறுமி வழக்கில் விசாரணை தாமதம் என குற்றச்சாட்டு
செஞ்சியில் சிறுமி மாயமாகி ஒரு மாதத்துக்கும் மேலாகியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கனிமொழி குற்றம்சாட்டினார். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்திய பிறகே அரசு நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் கூறினார். 'நாங்களே சொல்லிச் சொல்லி ஆட்சி நடத்துவதற்குப் பதிலாக திமுகவே ஆட்சியில் இருக்கலாமே' என விமர்சித்தார்.
தவெக ஆட்சியில் சிறுமிகள் முதல் மாவட்ட ஆட்சியர்கள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சொந்த முதலமைச்சருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பது வெட்கக்கேடானது என்றும் கடுமையாகச் சாடினார்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு
தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக கனிமொழி குற்றம்சாட்டினார். தீபாவளி காலத்தில் நடந்த கொலைச் சம்பவங்கள் குறித்து கேள்வி எழுப்பும்போது, முந்தைய திமுக ஆட்சியில் நடந்த சம்பவங்களை ஒப்பிட்டுப் பேசுவது சரியான பதிலாகாது என்றும் கூறினார். தற்போதைய ஆட்சியில் நிலவும் சூழலைப் பற்றி ஆளுங்கட்சியினர் சிந்திக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
குழந்தைகள் நலனில் அரசு கவனம் செலுத்த வேண்டும்
குழந்தைகளின் பெயரைச் சொல்லி வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்தவர்கள், பள்ளிகளுக்குச் சென்று கேக் வெட்டிக் கொண்டாடுவதில் காட்டும் ஆர்வத்தை, செஞ்சியில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறுவதில் காட்டவில்லை என கனிமொழி விமர்சித்தார்.
முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை மற்றும் குழந்தைகள் நலத்துறை, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மாயமான சிறுமியைக் கண்டுபிடித்து, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் கனிமொழி கூறினார்.
இதையும் படிங்க: திமுகவுக்கு திக் திக் நிமிடம் இல்ல.. இப்போ தமிழ்நாட்டுக்கு தான் அந்த நிலைமை! தவெக அரசை வெளுத்தெடுத்த கனிமொழி..!!!