×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திமுக எடுக்கும் புது விஸ்வரூபம்...! ஆட்டத்தை ஆட ஆரம்பிக்கும் கனிமொழி.. முதன்முறையாக திமுகவில் வரப்போகும் அந்த வரலாற்று மாற்றம்! ஸ்டாலின் எடுத்த முடிவால் அதிரும் அறிவாலயம்..!!!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவில் உள்கட்சி மறுசீரமைப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. நவம்பர் 15ஆம் தேதிக்குள் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்படலாம் என்றும், கனிமொழி, உதயநிதிக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திமுகவில் உள்கட்சி மறுசீரமைப்பு பணிகள் மீண்டும் வேகம் எடுத்துள்ளன. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 110 உள்கட்சி மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்களை நியமிக்க கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். நவம்பர் 15ஆம் தேதிக்குள் இந்தப் பணிகளை முடிக்க தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நவம்பர் 15க்குள் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்?

திமுகவின் உள்கட்சி மாவட்டங்களின் எண்ணிக்கையை 110ஆக உயர்த்தி கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி கட்சித் தலைமை அறிவித்தது. இதையடுத்து, மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளைப் பெற பல நிர்வாகிகள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால், இடைத்தேர்தல் பணிகள் குறுக்கிட்டதால் நியமன நடவடிக்கைகள் தற்காலிகமாக தள்ளிப்போனது.

இதையும் படிங்க: 9 நிமிட வீடியோக்கு தவெக கொடுத்த தரமான பதிலடி! தமிழக அரசியலில் வெடித்த அடுத்த பூகம்பம்..!!!

இதனால், தாமதம் குறித்து கட்சி நிர்வாகிகள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், நவம்பர் 15ஆம் தேதிக்குள் அனைத்து மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்களையும் நியமித்து முடிக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இளைஞரணி, மருத்துவ அணியிலும் மாற்றங்கள்

மாவட்ட அளவிலான மாற்றங்களுடன் கட்சியின் பல்வேறு அணிகளையும் வலுப்படுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன. இளைஞரணியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், மருத்துவ அணியின் மறுசீரமைப்பு தொடர்பான ஆலோசனைகளும் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக கட்சியின் அடித்தள அமைப்பை வலுப்படுத்தி, நிர்வாக ரீதியாக புதிய மாற்றங்களைக் கொண்டுவருவதே இந்த நடவடிக்கைகளின் நோக்கமாக பார்க்கப்படுகிறது.

கனிமொழிக்கு முக்கிய பொறுப்பு 

இதற்கிடையே, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தனது பொறுப்பில் இருந்து விலகக்கூடும் என்றும், கட்சியின் முக்கிய நிர்வாகப் பொறுப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்றும் அறிவாலய வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோருக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, மகளிரணி சார்பில் போராட்டங்கள், மாநாடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் கனிமொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது. அப்படி நியமிக்கப்பட்டால், திமுகவின் முதல் பெண் பொதுச்செயலாளர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

எனினும், மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் மூத்த நிர்வாகிகளின் பொறுப்பு மாற்றங்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. நவம்பர் மாதத்திற்குள் முக்கிய முடிவுகளை எடுக்க தலைமை திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களால் திமுக வட்டாரத்தில் அடுத்தகட்ட அறிவிப்புகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

இதையும் படிங்க: அரசியல் போட்டியால் CM விஜய் எடுத்த அதிர்ச்சி முடிவு..! வெளியான பரபரப்பு தகவல்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#திமுக மறுசீரமைப்பு #மு.க.ஸ்டாலின் #கனிமொழி #DMK Reorganization #உதயநிதி ஸ்டாலின்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story