BREAKING: இன்று மாலை அதிமுகவில் இணையும் காளியம்மாள்! அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு ஆரம்பம்!
நாம் தமிழர் முன்னாள் பேச்சாளர் காளியம்மாள் புதிய கட்சி திட்டத்தை கைவிட்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல்.
தமிழக அரசியலில் புதிய அதிர்வலை உருவாகியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நட்சத்திர பேச்சாளர் காளியம்மாள், திடீர் திருப்பமாக அதிமுகவில் இணைய முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அடுத்த கட்ட அரசியல் நகர்வு
நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய பின்னர், நீண்ட காலமாக மௌனம் காத்து வந்த காளியம்மாள், தனது அடுத்தகட்ட அரசியல் பயணம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தார். இடையில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியானது.
பாஜக உடனான பேச்சுவார்த்தை
பாஜக தரப்பில், காளியம்மாளை முன்னிலைப்படுத்தி தனி அமைப்பை தொடங்கி கூட்டணியில் இணைக்க திட்டமிட்டதாகவும், அதற்காக நாகப்பட்டினம் பகுதியில் பெண்களை திரட்டி வந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போதைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு அந்த முயற்சியை அவர் கைவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: போடு வெடிய... தவெக தலைவர் விஜய் கட்சியின் சின்னம் இதுதான்...! லீக்கானது ரகசிய சின்னம்!
இபிஎஸ் உடன் பேச்சு
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் (இபிஎஸ்) காளியம்மாள் நேரடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாகப்பட்டினம் தொகுதி மற்றும் முக்கிய பதவிகள் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
இன்று அதிகாரப்பூர்வ இணைவு
இந்த அரசியல் மாற்றத்தின் இறுதி கட்டமாக, காளியம்மாள் இன்று மாலை இபிஎஸ் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், வருங்கால தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சீமான் மற்றும் அண்ணாமலை ஆகியோரின் அரசியலை தீவிரமாக விமர்சித்து வந்த காளியம்மாள், இப்போது இபிஎஸ் தலைமையிலான அதிமுகவில் இணைவது அக்கட்சிக்கு கூடுதல் பலமாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்த இணைவு தமிழக அரசியலில் புதிய சமன்பாட்டை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: செம குஷியில் எடப்பாடி! அதிமுக கூட்டணியில் இணையும் கட்சி! அதிகரிக்கும் அதிமுக வின் பலம்!