போடு வெடிய... தவெக தலைவர் விஜய் கட்சியின் சின்னம் இதுதான்...! லீக்கானது ரகசிய சின்னம்!
தமிழக வெற்றிக் கழகத்திற்கு வரும் 24ம் தேதி விசில் அல்லது மோதிரம் சின்னம் ஒதுக்கப்படலாம் என தகவல் வெளியாகி, 2026 தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமாகின்றன.
தமிழக அரசியல் களத்தில் புதிய அசைவு ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் தயாரிப்பில் வேகம் கூட்டும் நோக்கில், கட்சி தலைமை தரப்பு தற்போது தீர்மானமான முடிவுகளை எடுத்து வருகிறது.
24ம் தேதி உறுதி ஆகும் சின்னம்
தமிழக வெற்றிக் கழகத்திற்கு வரும் 24ம் தேதி விசில் அல்லது மோதிரம் சின்னம் ஒதுக்கப்படுவது உறுதி ஆகலாம் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. சின்னம் கிடைத்தவுடன், தேர்தல் பணிகளை முழுவீச்சில் தொடங்க கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டணி பேச்சுவார்த்தை குழு
சின்னம் அறிவிக்கப்பட்ட பின்னர், 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்ட முடிவு செய்துள்ள விஜய், மூத்த அரசியல் தலைவர் தலைமையில் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவை அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அடிமேல் அடிவாங்கும் எடப்பாடி! தவெகவில் இணையும் அதிமுக வின் முன்னாள் எம்பி....! தவெக அரசியலில் பரபரப்பு!
முதற்கட்ட அணுகல்
தற்போதைய அரசியல் சூழலில் எந்த அணியிலும் சேராமல் உள்ள பாமக, தேமுதிக, அமமுக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையைத் தொடங்க செங்கோட்டையன் தரப்பு ஆயத்தமாகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் 2026 தேர்தலுக்கு வலுவான அரசியல் அமைப்பை உருவாக்கும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் 2026 தேர்தல் களத்தில் தன்னம்பிக்கையுடன் நகர்ந்து வருவது தெளிவாகத் தெரிகிறது. வரும் நாட்களில் இந்த கூட்டணி முயற்சிகள் தமிழக அரசியலில் புதிய திருப்பங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு! புதிய கட்சி அறிவிப்பு..? ஓபிஎஸ் எடுத்த இறுதி முடிவு...!!!