×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

யாரைக் கேட்டு இதெல்லாம் பண்ணீங்க.? கோபத்தில் கொந்தளித்த ஆளுநர்.!

யாரைக் கேட்டு இதெல்லாம் பண்ணீங்க.? கோபத்தில் கொந்தளித்த ஆளுநர்.!

Advertisement

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகிய பிறகு மாநில அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. முதல் முறையாக தேர்தலை சந்தித்த விஜயின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் ஆட்சி அமைக்க தேவையான முழு பெரும்பான்மை கிடைக்காததால் அரசியல் களத்தில் தொடர்ந்து குழப்ப நிலை நீடித்து வருகிறது.

தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களிலேயே விஜய்க்கு பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. மேலும் நேரு அரங்கத்தில் பதவியேற்பு விழாவிற்கான ஆரம்ப கட்ட ஏற்பாடுகளும் நடைபெற்றதாக கூறப்பட்டதால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் அதிகாரிகளிடம் கடும் அதிருப்தி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும்பான்மை நிரூபிக்கப்படாத சூழலில் எந்த அடிப்படையில் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்று அதிகாரிகளிடம் நேரடியாக கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: எடப்பாடி தலையில் அடுத்த இடியை இறக்கிய விஜய்! அதிமுகவை உடைக்கும் சி.வி.சண்முகம்?. விஜய்க்கு ஆதரவாக 30 எம்.எல்.ஏ-க்கள்.... அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பு.!!!

இதனால் அதிகாரிகள் தரப்பில் பதற்றமான நிலை ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளுநரின் கண்டனத்திற்கு பிறகு விஜய்க்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் சில சிறப்பு வசதிகள் உடனடியாக திரும்ப பெறப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. தவெக தரப்பும் இந்த விவகாரத்தை கவனத்துடன் கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக அரசு அதிகாரிகள் விரைவில் ஆளுநரிடம் முழுமையான விளக்கத்தை அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தமிழகத்தில் உருவாகியுள்ள அரசியல் மாற்றங்கள் அடுத்த கட்டத்தில் என்ன திருப்பத்தை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: கதறி அழுத வேண்டுதல் எப்போதும் வீண் போகாது! தவெக தொண்டரின் கதறல்....அடுத்த சில நிமிடங்களில் விஜய்க்கு வந்த குட் நியூஸ்.!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#governer #TVK #vijay #convoy cars
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story