×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

முதல்வர் விஜய்க்கு ஆளுநர் அர்லேகர் திடீர் கடிதம்...! புதிய தேர்வு குழுவால் மாறப்போகும் ஆட்டம்..!!!

தமிழக பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை நிரப்பவும், நிலுவையில் உள்ள பட்டமளிப்பு விழாக்களை நடத்தவும் முதல்வர் விஜய்க்கு ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement

தமிழக மாநிலப் பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாக காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை நிரப்பவும், நிலுவையில் இருக்கும் பட்டமளிப்பு விழாக்களை விரைவாக நடத்தவும் முதலமைச்சர் விஜய்க்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கடிதம் எழுதியுள்ளார். பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் மாணவர்களின் நலன் கருதி இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

துணைவேந்தர்கள் இல்லாததால் பல்கலைக்கழகங்களின் அன்றாட நிர்வாகம் மற்றும் கல்வி சார்ந்த பணிகள் பாதிக்கப்படுவதாகவும், தமிழக அரசு அமைத்துள்ள ஒருங்கிணைப்புக் குழுவால் ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் தனிப்பட்ட தேவைகளையும் முழுமையாகக் கையாள முடியவில்லை என்றும் ஆளுநர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இடைத்தேர்தலில் கடும் போட்டி..! ஆட்சியைத் தக்கவைக்குமா ஆளும் கட்சி..? 7 தொகுதிகளில் வெடிக்கப் போகும் யுத்தம்..! தவெகவுக்கு எதிராக திமுக போடும் மாஸ்டர் பிளான்..!!!

பட்டமளிப்பு விழாக்களை விரைவாக நடத்த வலியுறுத்தல்

பட்டமளிப்பு விழாக்கள் தாமதமாவதால் பட்டம் பெறக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவதாக ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்களை நடத்த தனித்தனி கால அட்டவணைகளை உருவாக்கி விரைவாக செயல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

துணைவேந்தர் தேர்வுக் குழு அமைப்பதில் கருத்து வேறுபாடு

துணைவேந்தர் நியமனத்தில் தேடுதல் மற்றும் தேர்வுக் குழுவின் அமைப்பு தொடர்பாக தமிழக அரசுக்கும் ஆளுநர் தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. யுஜிசி 2018 விதிமுறைகளின் 7.3(ii) பிரிவின்படி, தேர்வுக் குழுவில் யுஜிசி தலைவரின் பிரதிநிதியைச் சேர்ப்பது தொடர்பான விவகாரம் நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக வழக்கில் 2026 ஜனவரி 30-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும், அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 2-ம் தேதி ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பையும் ஆளுநர் அர்லேகர் தனது கடிதத்தில் நினைவுகூர்ந்துள்ளார்.

துணைவேந்தர் நியமனத்திற்கு புதிய பரிந்துரைகள்

இந்த விவகாரத்தில் பரஸ்பர ஆலோசனை மூலம் தீர்வு காணவும், வெளிப்படையான மற்றும் தகுதி அடிப்படையிலான நியமன முறையை உருவாக்கவும் ஆளுநர் பரிந்துரைகளை முன்வைத்துள்ளார். ஆளுநர், பல்கலைக்கழக சிண்டிகேட், யுஜிசி தலைவர் மற்றும் தமிழக அரசு ஆகிய நான்கு தரப்பிலிருந்தும் தலா ஒரு பிரதிநிதியை உள்ளடக்கிய தேர்வுக் குழுவை சட்ட விதிகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு உட்பட்டு அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதில் இடம்பெறும் உறுப்பினர்கள் நேர்மையும் தொழில்முறை நற்பெயரும் கொண்ட சிறந்த கல்வியாளர்களாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

துணைவேந்தர் பதவி காலியாகும் முன்பே, குறைந்தது 6 மாதங்களுக்கு முன்பு தேர்வுக் குழு அமைக்கும் பணிகளைத் தொடங்க வேண்டும். 15 நாட்களுக்குள் அறிவிப்பு வெளியிட்டு, இரண்டு மாதங்களுக்குள் நேர்காணல் உள்ளிட்ட தேர்வு நடவடிக்கைகளை முடிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளார்.

தேர்வுக் குழு ஒருமித்த முடிவின் அடிப்படையில் தகுதியான 3 பேரை முன்னுரிமை வரிசையில் பரிந்துரைக்க வேண்டும் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்களின் நலன் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முதலமைச்சர் விஜய் தனிப்பட்ட முறையில் தலையிட்டு இந்த விவகாரத்தில் சட்டரீதியான தீர்வு காண வேண்டும் எனவும் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

இதையும் படிங்க: இது எவ்வளவு பெரிய தவறு..! உங்களால இப்போ அவருக்கும் கஷ்டம்... முதல்வர் விஜய்க்கு தாடி பாலாஜி வெளியிட்ட பரபரப்பு வீடியோ..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#துணைவேந்தர் நியமனம் #ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் #முதல்வர் விஜய் #தமிழக பல்கலைக்கழகங்கள் #UGC விதிமுறைகள்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story