இதையெல்லாம் மறந்துடீங்களா...! என் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து புலம்பி தள்ளிய விஜய்! பல நாள் ரகசியத்தை போட்டு உடைத்த எடப்பாடி! தாராபுரத்தில் பரபரப்பு..!!!
தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் அதிமுக வேட்பாளர் பானுமதிக்கு ஆதரவாக பேசிய எடப்பாடி பழனிசாமி, விஜய் மற்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்தார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தளவாய்பட்டினத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மற்றும் தவெக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.
“பட வெளியீட்டுக்காக வீட்டில் காத்திருந்தார்”
அதிமுகவை விஜய் விமர்சிப்பது குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, கட்சி தொடங்கி சில ஆண்டுகளே ஆன நிலையில், நீண்ட அரசியல் வரலாறு கொண்ட அதிமுகவை குறைத்து மதிப்பிடுவது சரியல்ல என தெரிவித்தார். தொடர்ந்து, தான் முதல்வராக இருந்த காலத்தில் விஜய்யின் திரைப்பட வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டபோது, உதவி கேட்டு தனது வீட்டிற்கு அவர் வந்ததாகவும், சுமார் மூன்று மணி நேரம் அங்கு காத்திருந்ததாகவும் பழனிசாமி கூறினார்.
பட வெளியீட்டுக்கு தேவையான அனுமதி தொடர்பாக அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். விடுமுறை நாளாக இருந்தபோதிலும் விஜய்யின் கோரிக்கையை ஏற்று உதவியதாக கூறிய பழனிசாமி, அந்த நிகழ்வை நினைவுகூர்ந்து தற்போது விஜய் அதிமுகவை விமர்சிப்பதை சாடினார்.
இடைத்தேர்தல் குறித்து கடும் குற்றச்சாட்டு
தாராபுரம் இடைத்தேர்தல் இயல்பாக ஏற்பட்ட ஒன்று அல்ல என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ. கட்சி மாறியதால்தான் மீண்டும் தேர்தல் வந்துள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர் பின்னர் தவெகவில் இணைந்ததை குறிப்பிட்ட அவர், இதை மக்கள் இந்தத் தேர்தலில் கவனத்தில் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தவெக வேட்பாளர் சத்யபாமா பிரசார மேடையில் கண்ணீர் விட்டது குறித்தும் பழனிசாமி விமர்சனம் முன்வைத்தார். அவரது மேடைப் பேச்சையும் செயல்பாடுகளையும் குறிப்பிட்டு அரசியல் ரீதியாக கிண்டல் செய்தார். அதிமுக தொண்டர்களின் உழைப்பால் வெற்றி பெற்றவர்கள் பின்னர் கட்சி மாறுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.
தவெக அரசின் செயல்பாடுகளையும் விமர்சித்த இபிஎஸ்
தொடர்ந்து பேசிய பழனிசாமி, சட்டம்-ஒழுங்கு, மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து தவெக அரசை விமர்சித்தார். கரூர் சம்பவத்துக்குப் பிறகு விஜய்யின் செயல்பாடுகள் குறித்தும் கேள்வி எழுப்பிய அவர், மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு அரசு உரிய தீர்வு வழங்கவில்லை என குற்றம்சாட்டினார்.
இடைத்தேர்தலில் விஜய் பிரசாரம் செய்தால் மட்டும் வெற்றி உறுதி என்ற எண்ணம் பலிக்காது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தாராபுரம் வாக்காளர்கள் அதிமுக வேட்பாளர் பானுமதிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு தனது பிரசார உரையை நிறைவு செய்தார்.
இதையும் படிங்க: செங்கோட்டையன் சொன்னது நடந்துடும் போலவே....! அதிமுக கோட்டையிலேயே கை வைத்த தவெக... விஜய பாஸ்கருடன் இணைந்த அதிமுக Ex அமைச்சர்கள்..!!!