×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

செங்கோட்டையன் சொன்னது நடந்துடும் போலவே....! அதிமுக கோட்டையிலேயே கை வைத்த தவெக... விஜய பாஸ்கருடன் இணைந்த அதிமுக Ex அமைச்சர்கள்..!!!

ஓமலூர் திருமண விழாவில் தவெகவில் இணைந்த விஜயபாஸ்கருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, அன்பழகன் பேசிய வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் ஏற்படுத்தி வரும் தாக்கம் குறித்து தொடர்ந்து விவாதங்கள் எழுந்து வருகின்றன. சமீபத்தில் அதிமுகவைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் இணைந்த நிலையில், மேலும் பல நிர்வாகிகள் அக்கட்சியை நோக்கி நகரத் தயாராக இருப்பதாக கே.ஏ. செங்கோட்டையன் கூறியிருந்தார். இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் நடந்த திருமண விழாவில் நிகழ்ந்த ஒரு சந்திப்பு அரசியல் வட்டாரத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

விஜயபாஸ்கருடன் சகஜமாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர்கள்

ஓமலூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பங்கேற்றிருந்தார். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்களான தங்கமணி மற்றும் அன்பழகன் ஆகியோர் அவருடன் சிரித்தபடி சகஜமாக பேசினர். இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

இதையும் படிங்க: அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு ரெடி....! தவெகவில் இணைய தயார் நிலையில் இருக்கும் 20 முக்கிய புள்ளிகள்...! தெறிக்கவிட்ட செங்கோட்டையன்....!!!

அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் இந்த சந்திப்பில், மூத்த தலைவர்கள் இடையே காணப்பட்ட நெருக்கம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக அதிமுகவில் இருந்து சில முக்கிய நிர்வாகிகள் தவெக பக்கம் செல்வதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வரும் சூழலில், இந்த வீடியோ கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.

செங்கோட்டையன் கருத்துக்கு பிறகு அதிகரித்த பரபரப்பு

ஏற்கனவே 6 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் இணைந்துள்ள நிலையில், மேலும் 10 முதல் 20 அதிமுக நிர்வாகிகள் தவெகவில் இணையத் தயாராக இருப்பதாக செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். அவரது இந்தக் கருத்து அதிமுகவின் உட்கட்சி அரசியல் குறித்து விவாதத்தை தீவிரப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து வெளியாகும் ஒவ்வொரு தகவலும் அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

அடுத்தகட்ட நகர்வு குறித்து எழும் கேள்விகள்

வரவிருக்கும் இடைத்தேர்தல் மற்றும் தமிழக அரசியலின் அடுத்தகட்ட நகர்வுகளை எதிர்நோக்கியுள்ள நிலையில், ஓமலூரில் நடைபெற்ற இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் இந்த சந்திப்பு நடந்திருப்பது அரசியல் கவனத்தை மேலும் அதிகரித்துள்ளது. எனினும், தலைவர்களின் சந்திப்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அடுத்தகட்ட அரசியல் முடிவுகளை உறுதி செய்ய முடியாது என்பதால், அவர்களின் எதிர்கால நடவடிக்கைகள் எப்படி அமைகின்றன என்பதே அடுத்த முக்கிய கேள்வியாக உள்ளது.

 

இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்...! இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை...! பாமக தலைவர் அன்புமணி ராமாதாஸ் அதிரடி அறிவிப்பு..! அதிமுக கூட்டணிக்கு விழுந்த பேரிடி...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#தவெக #vijay tvk #அதிமுக நிர்வாகிகள் #எடப்பாடி பழனிசாமி #ஓமலூர் அரசியல்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story