×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தவெக அரசுக்கு நெருக்கடி....! 6 MLA-க்கள் பதவி விலகல்... அமித்ஷாவிடம் எடப்பாடி வைத்த கோரிக்கை! அதிர்ச்சியில் CM விஜய்!!!

அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தவெக ஆட்சி தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

தமிழக அரசியலில் ஆளும் தமிழக வெற்றி கழகத்துக்கு எதிராக அதிமுக புதிய அரசியல் நகர்வுகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பில், தவெக ஆட்சி அமைந்த விதம் தொடர்பாக பல்வேறு முக்கிய விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி வைத்ததாக கூறப்படும் கோரிக்கை

அமித்ஷாவுடனான சந்திப்பின்போது, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டாக பதவி விலகுவது குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், தவெக ஆட்சி அமைப்பு தொடர்பாக நடந்ததாகக் கூறப்படும் குதிரை பேர விவகாரங்கள் குறித்தும் அவர் எடுத்துரைத்ததாக தெரிகிறது.

இதையும் படிங்க: உன்னால முடிஞ்சத பாத்துக்கோ! சி.வி.சண்முகத்தை கட்சியில் இருந்து நீக்காமல் இருக்கும் எடப்பாடி...! பின்னணியில் உள்ள சட்ட கணக்கு.... தொடர்ந்து சவால் விடும் சண்முகம்...!!!!

இந்த விவகாரத்தில் மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. எனினும், இந்த தகவல்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த உறுதிப்படுத்தலும் இதுவரை வெளியாகவில்லை.

மத்திய விசாரணை தொடங்கினால் அரசுக்கு நெருக்கடி?

எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்று விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டால், தமிழக அரசியலில் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, ஆட்சி அமைந்த விதம் தொடர்பான குற்றச்சாட்டுகள் விசாரணை வளையத்துக்குள் வந்தால், அது தமிழக அரசுக்கு அரசியல் நெருக்கடி மற்றும் நிர்வாக ரீதியான சிக்கல்களை உருவாக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால், அதிமுகவின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் மற்றும் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து தமிழக அரசியல் களத்தில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

இதையும் படிங்க: எடப்பாடியை எதிர்த்து நிற்கும் 2 புள்ளிகள்! விஜய்யின் தவெக அரசுக்கு ஆதரவு.... அதிமுகவை அதிரவைக்கும் அரசியல் நகர்வு!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#எடப்பாடி பழனிசாமி #அமித்ஷா சந்திப்பு #தவெக ஆட்சி #AIADMK #Tamil Nadu Politics
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story