"நீட் எதிர்ப்பு திமுகவின் சுயநல நாடகம்..." அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணித்த அண்ணாமலை.!!
நீட் எதிர்ப்பு திமுகவின் சுயநல நாடகம்... அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணித்த அண்ணாமலை.!!

தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய நீட் தேர்விற்கு எதிரான மசோதாவை மத்திய அரசு நிராகரித்தது. இது தொடர்பாக அனைத்து கட்சிகளின் ஆலோசனைகளை கேட்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த திமுக அரசு முடிவு செய்திருக்கிறது. ஆனால் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.
நீட் மசோதாவை நிராகரித்த மத்திய அரசு
மருத்துவ படிப்பில் சேர்வதற்கு மத்திய அரசால் கொண்டுவரப்பட்டிருக்கும் நீட் நுழைவுத் தேர்வால் ஏராளமான மாணவ மாணவிகள் தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் தற்கொலை செய்து கொண்டனர். இதன் எதிரொலியாக தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என்ற மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த மசோதாவை மத்திய அரசு தொடர்ந்து நிராகரித்தது.
அனைத்துக் கட்சிக் கூட்டம்
நீட் தேர்வு விலக்கு மசோதா நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதன் படி தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெறும் என முதல்வர் தெரிவித்திருந்தார். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இந்தக் கூட்டத்தை நிராகரிப்பதாக எதிர்க்கட்சியான அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
இதையும் படிங்க: "சொல்லி அடிக்கும் கில்லி.." முதல்வரின் அடுத்த கட்ட நகர்வுகள்.!! கலக்கத்தில் ஆளுநர் மாளிகை.!!
நிராகரித்த அண்ணாமலை
அதிமுகவைத் தொடர்ந்து நீட் தேர்விற்கு எதிரான அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழக பாஜகவும் அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, நீட் தேர்வு வந்த பிறகு தான் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்களும் மருத்துவ படிப்பில் சேர முடிகிறது. எனவே அந்த தேர்விற்கு எதிராக நடைபெற இருக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என தெரிவித்திருக்கிறார். மேலும் நீட் தேர்விற்கு எதிரான எதிர்ப்பு என்பது திமுகவின் சுயநல நாடகம் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: "பேசாம கட்சியை விட்டு போயிடுங்க." டெல்லியில் அண்ணாமலைக்கு செக்.?!