×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்த விஷயத்தில் விஜயை விடவே கூடாது.. பழி தீர்க்க காத்திருக்கும் திமுக.! தீவிர திட்டத்தில் ஸ்டாலின்.!

இந்த விஷயத்தில் விஜயை விடவே கூடாது.. பழி தீர்க்க காத்திருக்கும் திமுக.! தீவிர திட்டத்தில் ஸ்டாலின்.!

Advertisement

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக கட்சி எதிர்பாராத வகையில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. திமுகவே மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் என்று அக்கட்சியினரும், அரசியல் விமர்சகர்களில் பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், தவெகவின் இந்த வெற்றி தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து திமுக தொடர்ந்து தீவிரமாக ஆய்வு செய்து வந்த நிலையில், தற்போது கவனம் முழுவதும் வரவிருக்கும் இடைத்தேர்தல்களின் மீது திரும்பியுள்ளது. தமிழகத்தில் தற்போது ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக உள்ளதால், எப்போது வேண்டுமானாலும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதையடுத்து, அந்தத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின், மதுராந்தகம் தொகுதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து கரூர் மற்றும் திருச்சி கிழக்கு மாவட்ட நிர்வாகிகளுடனும் விரைவில் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: BREAKING: திடீர் திருப்பம்! தவெக கூட்டணியில் இணையும் பெரிய கட்சி.... இன்னும் சற்றுநேரத்தில் வெளியாகும் அதிகாரபூர்வ் அறிவிப்பு!! உற்றுநோக்கும் அரசியல் கலம்!!!

சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயின் தவெக கட்சியிடம் ஏற்பட்ட தோல்வியில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில் இருக்கும் திமுகவுக்கு, சமீப காலமாக கட்சியினருக்கு எதிரான கைது நடவடிக்கைகள் உள்ளிட்ட அரசியல் சம்பவங்களும் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இதன் காரணமாக, வரவிருக்கும் 7 தொகுதிகளின் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அரசியல் ஆதிக்கத்தை நிரூபிப்பதோடு, விஜயின் அரசியல் வளர்ச்சிக்கும் சவால் விடுக்கும் வகையில் திமுக தீவிரமாக களமிறங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: விரக்தியில் விஜய் எடுத்த அதிர்ச்சி முடிவு.... "எல்லாம் சேர்ந்து சதி பண்ணிட்டாங்க". ஆட்சி அமைக்கும் முடிவை திடீரென கைவிட்ட விஜய்? மக்களின் நிலை என்ன.?

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#TVKvsDMK #stalin #vijay #by election #Assembly Election
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story