திருச்சி தொகுதியில் களமிறங்கும் மு.க. ஸ்டாலின்? திமுக MLA பேச்சு.. அறைகூவல் சவால்.!
Anita Radhakrishnan DMK Latest Speech: சிங்கப்பூர் போல மாற்றி வைத்திருந்த கொளத்தூர் தொகுதியின் கேடுகெட்ட மக்கள் மு.க. ஸ்டாலினை தோற்கடித்துவிட்டதாக திமுக எம்.எல்.ஏ ஆதங்கம் தெரிவித்தார்.
திமுக எம்.எல்.ஏவின் பேச்சு கொளத்தூர் மக்களை கோபத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
4 மாதமே ஆட்சி:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதியின் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன், தனக்கு வாக்களித்த வாக்காளப்பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் கலந்துகொண்டு இருந்தார்.
இதையும் படிங்க: BREAKING: அதிமுக கோட்டையில் விழுந்த பெரிய ஓட்டை! ஒரே நாளில் 10,000 ஆதரவாளர்களை திமுக வில் இணைத்த முக்கிய புள்ளி! அதிர்ச்சியில் அரசியல் உலகம்!
தூத்துக்குடியில் நடந்த விழாவில் பேசிய அவர், "ஆதவ் அர்ஜுனா தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து திருச்செந்தூருக்கு வந்து வெற்றிபெற முடியுமா? நான் சவால் விடுகிறேன். எவரெவரோ ஆட்சிக்கு வந்து ஏதேதோ பேசுகிறார்கள். இன்னும் 4 மாதங்கள் மட்டுமே ஆட்சி நீடிக்கும்.
கீழே விழுந்துவிடும்:
கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் என 4 கட்சிகள் அவர்களை தங்குகிறார்கள். அவர்களில் ஒருவர் வந்துவிட்டால் ஆட்சி கீழே விழுந்துவிடும். திருச்சியில் நடைபெறவுள்ள தேர்தலில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என கூறியுள்ளோம்.
கேடுகெட்ட மக்க(ள்):
அவர் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். கொளத்தூர் தொகுதியை சிங்கப்பூர் போல மாற்றி வைத்திருந்தார். ஆனால், கேடுகெட்ட அந்த தொகுதி மக்கள் தோற்கடித்துவிட்டார்கள். நினைத்துப்பார்க்க முடியுமா?" என பேசினார்.
அனிதா ராதாகிருஷ்ணனின் இந்த பேச்சு திமுக வட்டாரங்களில் கொண்டாடப்பட்டாலும், தவெக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பாஜக - அதிமுக இணைந்தது ஏன்? உண்மையை போட்டுடைத்த EPS...!