BREAKING: அதிமுக கோட்டையில் விழுந்த பெரிய ஓட்டை! ஒரே நாளில் 10,000 ஆதரவாளர்களை திமுக வில் இணைத்த முக்கிய புள்ளி! அதிர்ச்சியில் அரசியல் உலகம்!
ஓபிஎஸ் அணியின் முக்கிய முகமான வைத்திலிங்கம் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, டெல்டா பகுதியில் 10 ஆயிரம் ஆதரவாளர்கள் திமுகவில் சேர்ந்தது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் டெல்டா மண்டலத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்டுள்ள புதிய அரசியல் நகர்வு, வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சிகளின் வியூகங்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவுக்கு பெரிய பின்னடைவு
ஓபிஎஸ் அணியின் மிக முக்கிய தூணாகக் கருதப்பட்ட ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், சமீபத்தில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து திமுகவில் இணைந்தார். இதனால் டெல்டா பகுதியில் அதிமுகவின் பலம் குறைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
10,000 ஆதரவாளர்கள் திமுகவில் இணைப்பு
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் சுமார் 10,000 பேர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்தனர். இது அரசியல் அதிர்ச்சி என பலரால் குறிப்பிடப்படுகிறது.
இதையும் படிங்க: திடீர் திருப்பம்! தவெக கட்சியை சேர்ந்த 40 முக்கிய புள்ளிகள் திமுகவில் இணைவு! அதிர்ச்சியில் அல்லேலப்படும் விஜய்!
ஸ்டாலின் பாராட்டு உரை
இந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வைத்திலிங்கத்தின் வருகையை உற்சாகமாக வரவேற்றார். “வைத்திலிங்கம் திமுகவிற்கு வருவதற்கு சற்று காலதாமதம் ஆனாலும், அவர் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்திருக்கிறார்” என நகைச்சுவையுடனும் நெகிழ்ச்சியுடனும் பேசினார்.
டெல்டா மண்டலத்தில் அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட இந்த மக்கள் ஆதரவு மாற்றம், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றியை மேலும் வலுப்படுத்தும் முக்கிய திருப்பமாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: என்ன.... நாளுக்கு நாள் இப்படி ஆகுதே! அதிருப்தியில் விஜய்! தவெக கட்சியிலிருந்து கூண்டோடு விலகி திமுகவில் ஐக்கியம்!