"எடப்பாடி பழனிச்சாமி இல்லை பொய் மூட்டை பழனிச்சாமி..." அதிமுக கருத்துக்கு திமுக அமைச்சர் பதிலடி.!!
எடப்பாடி பழனிச்சாமி இல்லை பொய் மூட்டை பழனிச்சாமி... அதிமுக கருத்துக்கு திமுக அமைச்சர் பதிலடி.!!
2026 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலுக்கு நாட்கள் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார். மேலும் திமுக அரசு தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும் குற்றம்சாட்டி வருகிறார். இதற்கு திமுக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்திருக்கிறார்.
வடலூர் பார்வதிபுரத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தின் விரிவாக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடலூர் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தின் விரிவாக்கம் மூலம் 6,711 மாணவ, மாணவிகள் பயனடைவார்கள் என தெரிவித்தார். மேலும் திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கூறாத திட்டங்களையும் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது எனக் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி மக்களிடம் தவறான கருத்துக்களை கூறி வருவதாக குற்றம் சாட்டினார். கொரோனா காலத்தில் மக்களை சந்திக்காத அவர் தேர்தலை கருத்தில் கொண்டு பல பெயர்களில் தமிழக மக்களிடம் சென்று வாக்கு கேட்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் திமுக அரசிற்கு எதிராக பொய்களை பரப்பி வரும் எடப்பாடி பழனிச்சாமி பொய் மூட்டை பழனிச்சாமியாகவே மாறிவிட்டார் எனவும் கடுமையாக தெரிவித்துள்ளார். அவசர உதவிக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி விட வேண்டும் என்ற தனிச்சட்டமே இருக்கிறது.
இதையும் படிங்க: "வாய்ப்பில்ல ராஜா... முடிந்தால் திமுக அரசு இந்த தீர்மானத்தை நிறைவேற்றட்டும்..." முதல்வருக்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலடி.!!
மேலும் ஆம்புலன்ஸுக்கு இடையூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சட்டம் இருக்கிறது. ஆட்சியில் இல்லாத போதே அதிமுக கட்சியினர் இவ்வளவு அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு இன்னும் எத்தனை கொடுமைகளை செய்வார்கள்.? எனவும் கேள்வி எழுப்பினார். மேலும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அரசியல் செய்வதற்காக பொய்யான கருத்துக்களை தொடர்ந்து கூறி வருகிறார் எனவும் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: "சினிமா வசனம் பேசி ஆட்சியைப் பிடிக்க முடியாது..." தவெக-வுடன் கூட்டணி இல்லை.!! இபிஎஸ் அதிரடி பதில்.!!