கடும் வார்த்தை போர்! அது என்ன உங்க அப்பா வீட்டு சொத்தா..? நாங்க என்ன கோபாலபுரத்து கொள்ளைக்காரர்களா..? மோதிக்கொள்ளும் திமுக -தவெக.!!
ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு உயிரியல் பூங்காக்களுக்கு இலவச அனுமதி அறிவிக்கப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து திமுக ஐடி விங் மற்றும் தவெக இடையே கடும் வார்த்தைப் போர் வெடித்துள்ளது.
தமிழக முதல்வரும், தவெக தலைவருமான ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு உயிரியல் பூங்காக்களுக்கு இரண்டு நாட்கள் இலவச அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் தவெக ஆதரவாளர்கள் இடையே கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
இலவச அனுமதி குறித்து அமைச்சர் அறிவிப்பு
ஜூன் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பொதுமக்கள் வண்டலூர், அமிர்தி மற்றும் குரும்பட்டி உயிரியல் பூங்காக்களுக்குக் கட்டணமின்றி செல்லலாம் என்று தமிழக வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் அறிவித்திருந்தார். மேலும், இதனால் அரசுக்கு ஏற்படும் முழு வருவாய் இழப்பையும் வாழ்முனி நாயக்கர் குடும்ப அறக்கட்டளை ஏற்றுக்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: ஷாக் நியூஷ்! குழந்தைகள் கண்முன்னே விஜய் சங்கீதாவிடம் அப்படி தான் நடந்துக்குவார்! விஜய் குறித்து சுசித்ராவின் குற்றச்சாட்டு!!!
திமுக ஐடி விங் விமர்சனம்
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து திமுக தகவல் தொழில்நுட்ப அணி தனது எக்ஸ் தளப் பதிவில் கடுமையான கேள்விகளை எழுப்பியது.உயிரியல் பூங்காக்கள் என்ன உங்க அப்பா வீட்டுச் சொத்தா? மாநில நிதி நிலை குறித்த அரசின் கருத்துகளுக்கு முரணாக, முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச அனுமதி வழங்கப்படுவது ஏன் என்றும், மக்கள் வரிப்பணத்தின் பயன்பாடு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
தவெக தரப்பின் பதிலடி
இதற்கு பதிலளித்த தவெக தரப்பு, உயிரியல் பூங்காக்களின் இலவச அனுமதிக்கான செலவை அறக்கட்டளையே ஏற்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் விமர்சனம் செய்யப்படுவதாக குற்றம்சாட்டியது. மேலும், திமுகவின் இந்த விமர்சனத்திற்குத் தவெக தரப்பிலிருந்து, “நாங்கள் என்ன கோபாலபுரத்து கொள்ளைக்காரர்களா, அரசு பணத்தை வாரி வீட்டிற்கு கொண்டு போக?” என்று மிக ஆக்ரோஷமாக பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. கடும் நிதி நெருக்கடியிலும் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மக்கள் பணத்தைக் கரைக்க முயன்ற அறிவாலயம் குழுவினர் தங்களைக் குறை கூறத் தகுதியில்லை என தவெக சார்பில் வபல்வேறு அரசியல் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.
இதனால் சமூக வலைதளங்களில் திமுக மற்றும் தவெக ஆதரவாளர்கள் இடையே விவாதம் தீவிரமடைந்துள்ளது. இலவச அனுமதி அறிவிப்பை மையமாகக் கொண்டு தொடங்கிய இந்த விவகாரம் தற்போது அரசியல் குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர்க்குற்றச்சாட்டுகளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: #Breaking : “சோபா அரசியல் சர்ச்சை" உதயநிதி பேச்சுக்கு விளக்கம் கொடுத்த திருமாவளவன்.!