×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Breaking : “சோபா அரசியல் சர்ச்சை" உதயநிதி பேச்சுக்கு விளக்கம் கொடுத்த திருமாவளவன்.!

#Breaking : “சோபா அரசியல் சர்ச்சை உதயநிதி பேச்சுக்கு விளக்கம் கொடுத்த திருமாவளவன்.!

Advertisement

திமுக வெளிநடப்பு :

தமிழக அரசியல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நடிகரும் தற்போதைய முதலமைச்சருமான விஜய் தலைமையிலான அரசுக்கு எதிராக நேற்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் திமுக கலந்து கொள்ளாமல் இருந்தது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

புஷ்பா அரசியல் என விமர்சனம் :

சட்டப்பேரவையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், விஜயை கடுமையாக விமர்சித்தார். “முதல்வர் வருவதாக சொன்ன சிறிது நேரத்திலேயே சோபா அலுவலகத்திற்கு சென்று விட்டது. இது புதிய அரசியல் இல்லை, புஷ்பா அரசியல்” என்று அவர் பேசியது சட்டப்பேரவையிலும், சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: “புஷ்பா பட பாணியில் ஆட்சி நடக்கிறது”... விஜய் அரசை கடுமையாக சாடிய உதயநிதி ஸ்டாலின்!

திருமாவளவன் விளக்கம் :

இந்த கருத்து குறித்து இன்று செய்தியாளர்கள் தொல். திருமாவளவன் அவர்களிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “எங்கள் அலுவலகத்திற்காக ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்ட சோபா தான் அது. நான் முதல்வர் பதவிக்காக காத்திருக்கவில்லை. மேலும் உதயநிதி பேசியது தங்களை குறிவைத்து அல்ல" என்றும் தெரிவித்தார்.

சோபாவுக்கு வந்த வாழ்வு :

அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், தலைவர்களின் அலுவலகங்கள் மற்றும் இல்லங்களுக்கு புதிய சோபாக்கள் வருவது கூட தற்போது அரசியல் அடையாளமாக பேசப்படுகிறது. திருமாவளவன் அலுவலகத்தில் புதிய சோபா வந்தது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து C. V. சண்முகம் இல்லத்திற்கும் புதிய சோபா கொண்டு வரப்பட்டதாக வெளியான தகவல்கள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தின. சாதாரண பொருளாக இருந்த சோபா, தற்போது தமிழக அரசியலில் அதிகார மாற்றம் மற்றும் அரசியல் நகர்வுகள் சின்னமாக பேசப்படுவது விமர்சகர்களிடையே கவனத்தை பெற்றுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#thirumavalavan #Vck #udhanithi stalin #dmk #vijay #TVK
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story