#அதிர்ச்சி : “திமுக EX அமைச்சர்கள் என்னிடம் பேசினார்கள்.. சிவி சண்முகம் அதிர்ச்சி தகவல்.!
“திமுக EX அமைச்சர்கள் என்னிடம் பேசினார்கள்.. சிவி சண்முகம் அதிர்ச்சி தகவல்.!
தொடர்ந்து செய்தியாளர்களிடம் விறுவிறுப்பாக பேசி வரும் C. V. சண்முகம் தற்போது மேலும் பல பரபரப்பு தகவல்களை வெளியிட்டு வருகிறார். அதில், “தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் நான் வெற்றி சான்றிதழ் வாங்கச் சென்றிருந்தேன்.
அப்போது சான்றிதழ் வாங்கிய உடனே இரண்டு திமுக முன்னாள் அமைச்சர்கள் என்னை தொடர்பு கொண்டு பேசினார்கள். ஆனால் அவர்கள் ஏன் பேசுகிறார்கள் என்பது அப்போது எனக்கு புரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “மறுநாள் காலை எடப்பாடி என்னிடம் ‘நாம் ஆட்சி அமைக்கப் போகிறோம், திமுக ஆதரவு தரும்’ என்று கூறினார். அதன் பிறகுதான் அந்த இரண்டு முன்னாள் அமைச்சர்கள் என்ன காரணத்திற்காக என்னை தொடர்பு கொண்டார்கள் என்பது எனக்கு புரிந்தது” என கூறினார்.
இதையும் படிங்க: “புஷ்பா பட பாணியில் ஆட்சி நடக்கிறது”... விஜய் அரசை கடுமையாக சாடிய உதயநிதி ஸ்டாலின்!
அதே நேரத்தில், “அந்த 2 முன்னாள் அமைச்சர்கள் யார் என்று என்னிடம் கேட்காதீர்கள். அவர்களின் பெயர்களை நான் நிச்சயம் வெளியிட மாட்டேன்” என்றும் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #Breaking : எடப்பாடியின் ரகசியங்களை உடைத்த சி.வி.சண்முகம்.. பரபரப்பு பேட்டி.!