×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Breaking : எடப்பாடியின் ரகசியங்களை உடைத்த சி.வி.சண்முகம்.. பரபரப்பு பேட்டி.!

#Breaking : எடப்பாடியின் ரகசியங்களை உடைத்த சி.வி.சண்முகம்.. பரபரப்பு பேட்டி.!

Advertisement

இன்று நடைபெற்ற சட்டப்பேரவை அமர்வில் விஜய் தலைமையிலான அரசு தனது பெரும்பான்மையை நிரூபித்தது. இந்த வாக்கெடுப்பில் அதிமுகவின் எஸ்.பி.வேலுமணி தரப்பை சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஆனால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மயிலம் தொகுதி எம்எல்ஏ C. V. சண்முகம் தற்போது பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

அதில், “இபிஎஸ் கூறும் அனைத்தும் தவறானது. விஜய் அரசுக்கு நாங்கள் ஆதரவு அளித்துள்ளோம். கட்சியின் பொதுச்செயலாளர் கொறடாவை நியமிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: “புஷ்பா பட பாணியில் ஆட்சி நடக்கிறது”... விஜய் அரசை கடுமையாக சாடிய உதயநிதி ஸ்டாலின்!

மேலும், “புதுச்சேரி ரிசார்ட்டில் நடந்த விஷயங்களை பற்றி எடப்பாடி வெளிப்படையாக பேச முடியுமா? அங்கு தானே முதல்வராக போவதாகவும், திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் என்றும் கூறினார்” என குற்றம்சாட்டினார்.

அதோடு, “டெல்லியில் பேசி அனுமதி வாங்கிவிட்டதாக கூறியவர் இன்று எதுவும் நடக்கவில்லை என்கிறார். அவர் பேசுவது அனைத்தும் பொய்” என்று சிவி சண்முகம் கடுமையாக விமர்சித்து தொடர்ந்து பேசி வருகின்றார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#CVShanmugam #VijayGovernment #TNPolitics #eps #Admk
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story