×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உங்க ஆட்டத்தை இதோட அடக்குறேன்.... தவெக அரசை அலறவிட ஸ்டாலிலின் வெளியிட்ட அறிக்கை..! களத்தில் களமிறங்கும் உதயநிதி...!!!

விவசாயிகள் பிரச்சினைகளை முன்வைத்து தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ஆம் தேதி தஞ்சாவூரில் உதயநிதி தலைமையில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Advertisement

விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்வைத்து தவெக அரசுக்கு எதிராக போராட்டத்தை தீவிரப்படுத்த திமுக முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி தஞ்சாவூரில் உதயநிதி தலைமையில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

விவசாயிகள் நலன் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளதாகவும், மேகதாது அணை விவகாரத்தில் அரசு காட்டி வரும் மெத்தனமான அணுகுமுறை தமிழக விவசாயிகளின் நலனை கடுமையாக பாதித்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இதனால் விவசாயிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: முதல்வர் விஜய்க்கு எதிராக திடீரென எகிறிய அண்ணாமலை! தவெக அரசுக்கு வந்த முதல் பெரிய நெருக்கடி.... அடுத்தடுத்து காத்திருக்கும் அதிர்ச்சி!!!

மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த எச்சரிக்கை

மேலும், வாழ்வாதாரத்திற்காக போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து, அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தவெக அரசு செவிசாய்க்கத் தவறினால், அடுத்தகட்டமாக மாநிலம் முழுவதும் மிகப்பெரிய அளவில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

இதையும் படிங்க: BREAKING: தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சியாதானா? திமுக எம்எல்ஏவுக்கு மருந்து கூட கிடைக்கல.... கொந்தளித்து குமுறிய ஸ்டாலின்...! தவெக அரசு மீது கடும் விமர்சனம்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#dmk #மு.க.ஸ்டாலின் #farmers protest #உதயநிதி #thanjavur
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story