BREAKING: தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சியாதானா? திமுக எம்எல்ஏவுக்கு மருந்து கூட கிடைக்கல.... கொந்தளித்து குமுறிய ஸ்டாலின்...! தவெக அரசு மீது கடும் விமர்சனம்!!!
விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டதாகவும், அரசு அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
விளாத்திக்குளம் தொகுதி எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயக நடைமுறைகளை மீறி அரசு செயல்படுவதாகவும், அரசியல் விமர்சனங்களை ஒடுக்குவதற்காகவே கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அரசு மீது கடும் விமர்சனம்
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டும் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் இணைய ஆதரவாளர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், அவதூறு வழக்குகளில் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகள் சேர்க்கப்படுவது குறித்து நீதிமன்றம் ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மறுபடியும் காவி பெயிண்ட்டா? தட்டி கேட்காமல் மியூட்-ல முதல்வர் இருக்காரு.... ஆக்ரோஷமாக அரசுக்கு நேரடி கேள்வி விட்ட உதயநிதி ஸ்டாலின்...!!!
அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு
கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயனுக்கு அவரது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை என்றும், அவருக்கான மருந்துகளை கொண்டு சென்றவர்களும் தடுக்கப்பட்டதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட நபரின் அடிப்படை சட்ட உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் கூட மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
காவல்துறைக்கு வேண்டுகோள்
தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சிதானா நடைபெறுகிறது என்ற கேள்வியையும் எழுப்பிய ஸ்டாலின், ஆட்சியாளர்களின் சட்டத்திற்குப் புறம்பான உத்தரவுகளை நிறைவேற்றுவது காவல்துறையின் பணி அல்ல என்று தெரிவித்துள்ளார். சட்டத்தின்படியும் மனசாட்சிப்படியும் செயல்பட வேண்டும் என்றும், இல்லையெனில் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் தனது அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: பரபரப்பு.... தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்களை தடுக்க அரசு அனுமதியோடு விபச்சார விடுதிகள் செயல்பட வேண்டும்! காயல் அப்பாஸ் சர்ச்சை பேச்சு.!!!