×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

“தாயாரை குறிவைத்து பேசுவது அநாகரிக அரசியல்”..  அ.ராசா பேச்சுக்கு கடும் எதிர்ப்பு!

“தாயாரை குறிவைத்து பேசுவது அநாகரிக அரசியல்”..  அ.ராசா பேச்சுக்கு கடும் எதிர்ப்பு!

Advertisement

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர்கள், தமிழக முதல்வர் ஜோசப் விஜய், அமைச்சர்கள் குறித்து கடுமையான மற்றும் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்திருந்தனர்.

இந்நிலையில் திமுகவின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், 'அரசியல் நாகரிகத்தை அடியோடு குழிதோண்டிப் புதைத்து, பொதுவெளியில் தரம் தாழ்ந்த பேச்சுகளைப் பேசுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கொள்கை முழக்கம் போடும் திமுகவின் எம்பி அ.ராசாஅவர்களின் இந்த அருவருக்கத்தக்க போக்கு தலைகுனிவானது!

மக்கள் தீர்ப்பை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாமல் விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு, மாற்றுக் கருத்துக்களைக் கூட எதிர்கொள்ள முதிர்ச்சியின்றி பெண்களையும் தாய்மையையும் கொச்சைப்படுத்துவது தங்களின் அப்பட்டமான பலவீனத்தையே காட்டுகிறது. தோல்வியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மனமில்லாமல், விரக்தி வரும்போதெல்லாம் பெண்களைக் குறிவைத்துத் தாக்குவதை திமுக வழக்கமாகக் கொண்டுள்ளது; திரு.உதயநிதி தொடங்கி இன்று வரை அக்கட்சியினர் அனைவரும் இதே மோசமான பாணியையே தொடர்ந்து பின்பற்றுகின்றனர்.

முதலமைச்சர் விஜய் அவர்கள் குறிப்பிட்ட "#ஆபாசநிதி" என்று சொன்னது போல, திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள திரு.௮.ராசா MP அவர்கள் இன்று பேசிய பேச்சு அமைந்துள்ளது. அக்கட்சியினர் பெண்களைத் தொடர்ந்து இழிவாகப் பேசுவது சற்றும் குறைந்தபாடில்லை; பெண்களே திமுகவை முற்றிலுமாக நிராகரித்து வருவதற்குக் காரணம் இவர்களின் இந்த வக்கிர சிந்தனைதான்!

கருத்து மோதல்களை எதிர்கொள்ள முடியாமல், தவெக அமைச்சர் @CTR_Nirmalkumar அவர்களின் தாயாரைக் குறிவைத்து இத்தகைய தரம் தாழ்ந்த தனிநபர் வசைபாடல்களையும் அச்சுறுத்தல்களையும் தொடுப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஜனநாயகத்தில் இந்த அநாகரிக அரசியல் ஒருபோதும் ஏற்புடையதல்ல!' என தெரிவிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: அண்ணா, கலைஞர் இருந்த பேரவை இது!.. விஜய் பேச்சை கடுமையாக சாடிய ஆ.ராசா!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#congress mp #Manickam thagore #DMK Protest #Rasa #TVK Vijay #MISA issue
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story