BREAKING: சற்று முன்... சட்டப்பேரவையில் திமுக திடீர் வெளிநடப்பு...! எ.வ. வேலு அறிவிப்பால் பரபரப்பு!!!
கோவை மாணவர் கொலை குறித்து சட்டப்பேரவையில் திமுக எழுப்பிய கேள்விகளுக்கு அரசு தரப்பில் உரிய விளக்கம் இல்லை எனக் கூறி திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
கோவை மாணவர் கொலை சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசு தரப்பில் திருப்திகரமான பதில் அளிக்கப்படவில்லை என திமுக உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து, எ.வ.வேலு தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
கேள்விகளுக்கு உரிய பதில் இல்லை என குற்றச்சாட்டு
கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் போது கோவை மாணவர் கொலை தொடர்பாக திமுக உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். மாணவர் கொலைக்கான பின்னணி, காவல்துறை நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விளக்கம் கோரப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், தங்களது நியாயமான கேள்விகளுக்கு அரசு தரப்பில் முறையான பதில் கிடைக்கவில்லை என திமுக தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
எ.வ.வேலு அறிவிப்பால் பரபரப்பு
திமுக கொறடா எ.வ.வேலு சட்டப்பேரவையில் பேசுகையில், கேள்விகளுக்கு உரிய விளக்கம் அளிக்கப்படாததால் வெளிநடப்பு செய்வதாக தெரிவித்தார். அரசிடம் இருந்து திருப்திகரமான பதில் கிடைக்காத நிலையில் இந்த முடிவை எடுப்பதாக அவர் கூறினார்.
உதயநிதி உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் வெளியேறினர்
எ.வ.வேலுவின் அறிவிப்பைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் பேரவையை விட்டு வெளியேறினர். இதனால் சட்டப்பேரவை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. திமுக வெளிநடப்பு காரணமாக கோவை மாணவர் கொலை விவகாரம் மீண்டும் அரசியல் ரீதியாக கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: திமுக- விழும் அதிரடி மாற்றம்! அறிவாலயத்தில் அரங்கேறும் அடுத்தகட்ட அரசியல்.... ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு..!!!