CM ஏன் இப்படி செய்தார்? அண்ணா... அண்ணா... விஜய்யை சுற்றி வளைத்த பெண் தொழிலாளர்கள்...! போட்டோ எடுத்தபோது நடந்த அந்த 'ஒரு' அதிர்ச்சி சம்பவம்..! இத யாரும் எதிர்பார்கலையே..!!!
முதல்வராக பொறுப்பேற்ற பிறகு பெரம்பூர் தொகுதிக்கு முதல் முறையாக சென்ற விஜய், பல மக்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது பெண் பணியாளருடன் கை குலுக்காததாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு முதல் முறையாக நேற்று வருகை தந்தார் முதல்வர் விஜய். தொகுதி மக்களின் வரவேற்புக்கு மத்தியில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைத் தொடங்கி வைத்த அவர், பின்னர் நடைபெற்ற ஒரு நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பூரில் மக்கள் நலத் திட்டங்கள் தொடக்கம்
பெரம்பூர் தொகுதியில் புதுப்பிக்கப்பட்ட எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய், பொதுமக்களின் கோரிக்கைகளை விரைவாகப் பெற புதிய இ-சேவை மையம் மற்றும் பிரத்யேக செயலியையும் அறிமுகப்படுத்தினார். மேலும், தவெக அரசின் புதிய குடும்ப அட்டை விநியோகத் திட்டத்தை தொடங்கி வைத்து, முதற்கட்டமாக 10 பயனாளிகளுக்கு ஸ்மார்ட் ரேஷன் அட்டைகளை வழங்கினார். அதன்பின் ரேஷன் கடைக்குச் சென்று அத்தியாவசியப் பொருட்களையும் நேரடியாக வழங்கினார்.
இதையும் படிங்க: முதல் நாளிலே பத்தி எரியும் பகை.... விஜய் பதவியேற்றபோது உதயநிதியின் ரியாக்ஷன்னை பாருங்க! இணையத்தில் விவாதத்தை உண்டாக்கிய வீடியோ!!!
மின்சார பேருந்து பணிமனையில் நடந்த தருணம்
தொகுதி ஆய்வின் ஒரு பகுதியாக மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மின்சாரப் பேருந்து சார்ஜிங் பணிமனைக்கும் முதல்வர் சென்றார். அப்போது அங்கு பணிபுரியும் பெண் ஊழியர்கள் அவருடன் ஆர்வமாக குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
அந்த நேரத்தில், பெண் பணியாளர் ஒருவர் கை குலுக்குவதற்காக தனது கையை நீட்டியதாகவும், அதற்கு முதல்வர் பதிலளிக்காமல் முன்னேறிச் சென்றதாகவும் கூறப்படும் வைரல் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
சமூக வலைதளங்களில் கலவையான கருத்துகள்
இந்தக் காட்சியை மையமாக வைத்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். சிலர், சாதாரண தொழிலாளி கை நீட்டியபோது கை குலுக்காமல் தவிர்த்தது ஏன் என்று கேள்வி எழுப்பி விமர்சித்து வருகின்றனர். மற்றொரு தரப்பினர், குறுகிய வீடியோவை மட்டும் வைத்து முடிவுக்கு வர முடியாது என்றும் முழு நிகழ்வின் பின்னணியைப் பார்க்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், பெரம்பூரில் நடைபெற்ற முதல்வரின் முதல் அதிகாரப்பூர்வப் பயணத்துடன் இந்த வீடியோவும் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: அப்படி ஒரு சிரிப்புக்கு பின்னாடி சொன்ன ஒரே வார்த்தை! முதல்வர் விஜயின் உரை குறித்து சௌமியா அன்புமணி சொன்னதை பாருங்க...!!!