கவர்ச்சியான வாக்குறுதிகள் சொல்லிட்டு இப்போ என்ன நடக்குது! உங்களுக்கு மண்டையில ஏதாவது இருக்கா..? தற்குறி கூட்டம் என பொழந்து கட்டிய மேயர் பிரியாவின் வீடியோ..!!!
கருணாநிதியின் 103-வது பிறந்த நாள் விழாவில் பேசிய சென்னை மேயர் பிரியா, தமிழக வெற்றிக் கழகத்தையும் அதன் ஆட்சியையும் கடுமையாக விமர்சித்து பல கேள்விகளை எழுப்பினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 103-வது பிறந்த நாள் விழாவில் பேசிய சென்னை மேயர் பிரியா, தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். புதிய ஆட்சியின் செயல்பாடுகள், வாக்குறுதிகள் மற்றும் சமூக வலைதள அரசியல் குறித்து அவர் எழுப்பிய கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளன.
கவர்ச்சியான வாக்குறுதிகளால் வெற்றி பெற்றீர்களா?
விழா மேடையில் உரையாற்றிய பிரியா, “நாங்கள் இதைச் செய்வோம், அதைச் செய்வோம் என்று கவர்ச்சியான மற்றும் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஒரு கூட்டம் ஆட்சிக்கு வந்துள்ளது. அது யார் என்பது அனைவருக்கும் தெரியும்” என்று கூறினார். மேலும், வெறும் கவர்ச்சியை மட்டுமே நம்பி வெற்றி பெற்றதாக விமர்சித்த அவர், “அதைத்தவிர என்ன ஃபீல்டு வொர்க் செய்திருக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
பொறுப்பை ஏற்க மறுக்கும் ஆட்சி
தொடர்ந்து பேசிய அவர், தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் தங்களது பொறுப்புகளை உணராமல் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை அதிகாரத்தில் இருப்பவர்கள் யாரும் முழுமையான பொறுப்பை ஏற்கவில்லை என்றும், எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அதற்குத் திமுகவையே காரணம் என குற்றம் சாட்டுவது வழக்கமாகிவிட்டதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: DMK... இந்த அரசாங்கம் உருட்டு கடை அல்வா தான் தருது.! 525 அறிவிப்புகள்… 10% கூட நடக்கல! எடப்பாடி பழனிசாமியின் நக்கல் பேச்சு விமர்சன வீடியோ!
இதுவரை அந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களோ, அமைச்சர்களோ நிர்வாகப் பொறுப்பை உணர்ந்து செயல்படுவதாக தெரியவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.
‘விர்ச்சுவல் வாரியர்ஸ்’ குறித்த சாடல்
சமூக வலைதளங்களில் செயல்படும் Virtual Warriors குறித்து பேசிய பிரியா, உண்மை மற்றும் பொய்யை சரிபார்க்காமல் பதிவுகளை வெளியிடுவதாக குற்றம்சாட்டினார். “ஒரு கண்டென்ட் பதிவிடுவதற்கு முன் அது உண்மையா, பொய்யா என்று கூட பார்க்க மாட்டீர்களா?” என்று கேள்வி எழுப்பிய அவர், அரசியலை சினிமாவுடன் ஒப்பிட்டு நடத்த முடியாது என்றும் கூறினார்.
மேலும், சமூக வலைதள ஆதரவாளர்களை வைத்து படம் எடுப்பது போல் அரசியல் நடத்த முயற்சிக்கப்படுவதாக சாடிய அவர், அரசியல் என்பது மூன்று மணி நேர திரைப்படம் அல்ல; மக்கள் வாழ்க்கையுடன் தொடர்புடைய பொறுப்பான செயல்பாடு என தனது கருத்தை பதிவு செய்தார்.
இதையும் படிங்க: இத யாருமே எதிர்பார்க்கல.... மேடையில் மேஜையை தூக்கிச் சென்ற CM விஜய்! வைரலாகும் அந்த ஆச்சரிய காட்சி...!!!