×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இப்படி ஒரு கணக்கா? சைலண்டாக மேயர் பிரியாவுக்கு சம்பவம் செய்த முதல்வர் விஜய்..! ஆடிப்போன சென்னை மாநகராட்சி.. வெளியான அதிரடி உத்தரவு.!!!

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் பிரிண்டர் கொள்முதல் நிதி ஒதுக்கீடு தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, முந்தைய ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் மதிப்பீடுகளை மறுஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

சென்னை மாநகராட்சியின் 2026-2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பிரிண்டர் கொள்முதல் திட்டத்தைச் சுற்றி புதிய சர்ச்சை எழுந்துள்ளது. 100 பள்ளிகளுக்கான பிரிண்டர்கள் வாங்க ரூ.60 லட்சம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அதே எண்ணிக்கையிலான பிரிண்டர்கள் தற்போது சென்னை மாநகராட்சி மூலம் ரூ.22.12 லட்சத்தில் வாங்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிண்டர் கொள்முதல் மதிப்பீட்டில் எழுந்த கேள்விகள்

கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், 100 பள்ளிகளுக்கான பிரிண்டர் கொள்முதலுக்கு ரூ.60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய கொள்முதலில் அதே தேவையை ரூ.22.12 லட்சத்தில் நிறைவேற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அரசுக்கு ரூ.37.78 லட்சம் மிச்சமானதுடன், முந்தைய மதிப்பீட்டில் சந்தை விலையை விட சுமார் 60 சதவீதம் வரை அதிக நிதி ஒதுக்கப்பட்டிருந்ததா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: BREAKING: முதல்வர் விஜய் அதிரடியாக ரத்து செய்தார்! ஒரே நாளில் ரூ.2000 கோடி அவுட்... தூய்மை அரசின் அதிரடி செயலால் அதிர்ச்சியில் திமுக..!!!

90 திட்டங்களின் மதிப்பீடும் மறுஆய்வு?

பிரிண்டர் விவகாரத்தைத் தொடர்ந்து, மாநகராட்சி பட்ஜெட்டில் இடம்பெற்ற 90 புதிய திட்டங்களின் செலவின மதிப்பீடுகளிலும் இதுபோன்ற குளறுபடிகள் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் வலுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, கடந்த ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டு இன்னும் செயல்படுத்தப்படாத திட்டங்களின் மதிப்பீடுகளை முழுமையாக மறுஆய்வு செய்யுமாறு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாநிலம் முழுவதும் ஆய்வு விரிவடையும் தகவல்

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, நிதி முறைகேடு குறித்த புகார்களுக்கு முக்கியத்துவம் அளித்து, உள்ளாட்சி அமைப்புகளில் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்ய நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை மாநகராட்சியைத் தொடர்ந்து மாநிலத்தின் பிற உள்ளாட்சி அமைப்புகளிலும் திட்ட மதிப்பீடுகள் ஆய்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுவதால், மேலும் பல விவரங்கள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 

இதையும் படிங்க: பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தில் புதிய மாற்றம்.... முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Chennai corporation #Mayor Priya Rajan #Budget 2026 #சென்னை மாநகராட்சி #Printer Tender
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story