பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தில் புதிய மாற்றம்.... முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு..!!!
தமிழகத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தில் மாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. புதிய அறிவிப்பை முதல்வர் ஜோசப் விஜய் விரைவில் வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் விவசாயிகளுக்காக அறிவிக்கப்பட்டிருந்த பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.50,000 வரையிலான தள்ளுபடி திட்டத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அதனை மறுஆய்வு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான புதிய அறிவிப்பை முதல்வர் ஜோசப் விஜய் விரைவில் வெளியிடுவார் என கூறப்படுகிறது.
ரூ.50,000 தள்ளுபடி திட்டம் மறுஆய்வு
முன்னதாக அறிவிக்கப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம் அனைத்து விவசாயிகளுக்கும் சமமான பலன் அளிக்காது என்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பழைய அறிவிப்பை ரத்து செய்து, கூடுதல் பயனளிக்கும் வகையில் புதிய வடிவமைப்பில் திட்டத்தை கொண்டு வர அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: உச்சக்கட்ட எதிர்பார்பில் மக்கள்! மகளிர் உரிமைத்தொகையில் தமிழக அரசு அதிரடி மாற்றம்.! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு.!!!
நிதியமைச்சர் ஏற்கனவே சுட்டிக்காட்டிய தகவல்
இந்த விவகாரம் குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் அண்மையில் கருத்து தெரிவிக்கும்போது, பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம் தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும், திட்டம் மறுஆய்வு செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதன்பின் பல கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
விரைவில் புதிய அரசாணை
தகவலின்படி, திட்ட மாற்றத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புதிய அரசாணை, தகுதி விதிமுறைகள் மற்றும் கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்ட விவரங்கள் இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள் மத்தியில் புதிய அறிவிப்புக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழகமே எதிர்பார்பில்.... சொன்ன சொல்லை இன்னும் 2 வாரத்தில் காப்பாற்ற போகும் முதல்வர் விஜய்! அம்பலமாக போகும் கஜானா ரகசியம்..!!!