தாராபுரம் தொகுதியால் தவெக-வுக்கு வந்த சிக்கல்... அருண்ராஜ் நியமனத்தால் மனக்கசப்பில் செங்கோட்டையன்..! தலைமைக்கு போன ரகசிய ரிப்போர்ட்டைப் பார்த்து அதிர்ச்சியில் முதல்வர் விஜய்..!!!
ராபுரம் தொகுதி பொறுப்பாளராக அமைச்சர் அருண்ராஜ் நியமிக்கப்பட்ட விவகாரத்தில் செங்கோட்டையனுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும், தேர்தல் பணிகளில் அவர் ஒதுங்கியிருப்பதாகவும் தகவல்.
தாராபுரம் சட்டமன்றத் தொகுதியின் பொறுப்பாளராக அமைச்சர் அருண்ராஜ் நியமிக்கப்பட்ட விவகாரம் கட்சிக்குள் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நியமனம் மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் தாக்கம் தேர்தல் பணிகளிலும் எதிரொலிப்பதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.
பொறுப்பாளர் நியமனத்தில் அதிருப்தி?
தாராபுரம் தொகுதிக்கான பொறுப்பை அமைச்சர் அருண்ராஜுக்கு தலைமை வழங்கியுள்ளது. இந்த முடிவு, மூத்த தலைவரான KAS என குறிப்பிடப்படும் செங்கோட்டையனுக்கு மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சமுதாய ரீதியிலான பிரதிநிதித்துவம் தொடர்பாகவும் அவருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
தேர்தல் பணிகளில் ஒதுங்கியிருப்பதாக தகவல்
இதனால் வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பணிகளில் செங்கோட்டையன் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. தொகுதியில் நிர்வாகிகள் களப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அவருடைய செயல்பாடு குறைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், தேர்தல் பணிகளில் ஈடுபடும் சில நிர்வாகிகளையும் அவர் தடுத்து நிறுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதன் காரணமாக தொகுதியில் கட்சியின் தேர்தல் பணிகள் பாதிக்கப்படலாம் என்றும், தாராபுரம் தொகுதி தேர்தல் பணிகள் தொடர்பாக தலைமைக்கு ரகசிய அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தலைமைக்கு சென்ற ரகசிய அறிக்கை
தொகுதியில் நிலவும் இந்த உள்கட்சி அதிருப்தி காரணமாக வெற்றி வாய்ப்பில் பாதிப்பு ஏற்படக்கூடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல். இதுகுறித்த தகவல் கட்சியின் தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜயின் கவனத்துக்கும் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் செங்கோட்டையன் அதிருப்தி விவகாரம் குறித்து கட்சி தலைமை கவனம் செலுத்தியுள்ளதாகவும், தேர்தல் பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெறுவதாகவும் கட்சி வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு ரெடி....! தவெகவில் இணைய தயார் நிலையில் இருக்கும் 20 முக்கிய புள்ளிகள்...! தெறிக்கவிட்ட செங்கோட்டையன்....!!!