உங்களுக்கான ஆப்பை நீங்களே வைத்துக்கொண்டீர்கள்.. திமுகவை விளாசிய புளூ சட்டை மாறன்!
உங்களுக்கான ஆப்பை நீங்களே வைத்துக்கொண்டீர்கள்.. திமுகவை விளாசிய புளூ சட்டை மாறன்!
நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் ஆகியோர் லண்டனில் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நேற்று முன்தினம் மாலை முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அஜித்தின் குழுவினர் பங்கேற்ற கார் பந்தயத்தை விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்த சம்பவமும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
இந்த நிலையில், சினிமா மற்றும் அரசியல் விமர்சகரான புளூ சட்டை மாறன், தனது எக்ஸ் தளத்தில் திமுகவை விமர்சிக்கும் வகையில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திமுகவின் அரசியல் பின்னடைவுகளுக்கு அக்கட்சியே காரணம் என்றும், சினிமா பிரபலங்களை மையப்படுத்திய அரசியல் அணுகுமுறைகள் குறித்தும் விமர்சனம் செய்துள்ளார்.
மேலும், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து திமுக ஆதரவு சார்ந்த தயாரிப்பு நிறுவனங்கள் திரைப்படங்களை தயாரித்ததையும் அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோல், தற்போதைய அரசியல் சூழலில் விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரும் சந்தித்துக் கொண்டிருப்பதையும் குறிப்பிட்டு, திமுகவின் அரசியல் நிலைப்பாடுகளை விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: “அவதூறுக்கும் மிரட்டலுக்கும் அஞ்சமாட்டோம்”.. திமுகவை விளாசிய அமைச்சர் ரமேஷ்!
தொடர்ந்து, சினிமா பிரபலங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அவர்களின் வளர்ச்சிக்கு அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் உதவியதன் விளைவுகளை திமுக எதிர்கொண்டு வருவதாக புளூ சட்டை மாறன் தனது பதிவில் தெரிவித்துள்ளார். பல கோடி ரூபாய் செலவழித்து வளர்த்த சினிமா பிரபலங்கள் இறுதியில் அவர்களுக்கே லாபமாக மாறிவிட்டனர் என்ற கருத்தையும் அவர் முன்வைத்துள்ளார்.
இறுதியாக, திமுக தனது அரசியல் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்து திருந்த வேண்டும் என புளூ சட்டை மாறன் வலியுறுத்தியுள்ளார். அஜித்–விஜய் சந்திப்பைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட இந்த அரசியல் விமர்சனப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படிங்க: "யாருமே இல்லாத டீக்கடையில் யாருக்கு டீ ஆற்றி” கதறுகிறார்கள்.. திமுகவை கடுமையாக விமர்சித்த தவெக!