×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் CM விஜய் முதலில் மனைவிக்கு பதில் சொல்லட்டும்! இன்னும் 4- 6 மாதங்களில் முதல்வர் ஸ்டாலின் தான்..... அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேச்சு.!!!

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் ஆட்சி மாற்றம் வரும் என்றும், மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வருவார் என்றும் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டுள்ளார். இன்னும் 4 மாதங்கள்தான் தற்போதைய ஆட்சி இருக்கும் என்றும், அடுத்த 6 மாதங்களில் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வருவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சர் விஜயை குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன் 5,872 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு எதிராக தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் முருகன் 66,851 வாக்குகள் பெற்றிருந்தார். தேர்தல் வெற்றிக்குப் பிறகு தொகுதியில் வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கும் பணியில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

“மீண்டும் ஸ்டாலின்தான் முதல்வர்”

அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியை சிங்கப்பூர் போல மாற்றியிருந்தார் என்று கூறினார். அதே நேரத்தில், கொளத்தூர் மக்களை விமர்சிக்கும் வகையிலும் அவர் பேசியது கவனம் பெற்றது.

இதையும் படிங்க: தவறு எப்போ நடக்கும்ன்னு திமுக காத்துக்கிட்டு இருக்கு.... யாரும் வேணாம்! நீங்க மறுதேர்தலுக்கு ரெடி ஆகுங்க! தவெகவுக்கு 200+ சீட் கன்பார்ம்.... முதல்வர் விஜய்க்கு மூத்த அரசியல்வாதி பழ.கருப்பையாயின் அதிரடி கருத்து....!!!

மேலும், வரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகம் எந்த இடத்திலும் நிலைநிறுத்த முடியாத அளவுக்கு எதிர்க்கட்சிகள் செயல்படும் என்றும் தெரிவித்தார். திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகவும் கூறினார்.

முதல்வர் விஜயை விமர்சித்த அனிதா

தொடர்ந்து பேசிய அவர், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவோம் என்று கூறும் முதலமைச்சர் விஜய் முதலில் தனது குடும்பத்தினருக்கே பதில் சொல்ல வேண்டும் என்று விமர்சித்தார். விஜய் பதவியேற்ற விழாவில் அவரது மனைவியும் மகளும் கலந்துகொள்ளவில்லை என குறிப்பிட்ட அவர், அதனை அரசியல் விமர்சனமாக முன்வைத்தார்.

அவரது இந்த பேச்சு தற்போது அரசியல் வட்டாரங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களிலும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துகள் பரவி வருகின்றன.

 

இதையும் படிங்க: திருச்சி தொகுதியில் களமிறங்கும் மு.க. ஸ்டாலின்? திமுக MLA பேச்சு.. அறைகூவல் சவால்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#anitha radhakrishnan #MK Stalin #தமிழக அரசியல் #TVK #Tiruchendur MLA
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story