BREAKING : நாளை தென்மண்டல கவுன்சிலில் கூட்டம்...! தலைவராக அமித்ஷா.... CM விஜய்கு கிடைத்த முக்கிய பதவி..!!!
மாமல்லபுரத்தில் அமித்ஷா தலைமையில் 31-வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் நாளை நடைபெறுகிறது. தென்மாநில முதல்வர்கள் பங்கேற்று முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர்.
மாமல்லபுரத்தில் நாளை 31-வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், தமிழக முதல்வர் விஜய் துணைத் தலைவராக பங்கேற்கிறார். தமிழ்நாடு உள்ளிட்ட 5 தென்மாநிலங்களின் முதலமைச்சர்கள் நேரில் கலந்துகொள்கின்றனர்.
தென்மாநிலங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது, மாநிலங்களுக்கு இடையே நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, முக்கிய வளர்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளன.
இதையும் படிங்க: சற்று முன்.... பாஜகவிலிருந்து விலகி தவெகவில் ஐக்கியம்..! பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சரத்குமார்! வெளியிட்ட பரபரப்பு பதிவு...!!!
மாமல்லபுரத்தில் நாளை முக்கிய ஆலோசனை
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். மாநிலங்களுக்கிடையேயான நீர்வளப் பகிர்வு, உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான முக்கிய விவகாரங்களும் விவாதத்திற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசு சார்பில் முன்னேற்பாடுகள் தீவிரம்
கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஏற்கெனவே அமைச்சர்கள் நிர்மல் குமார் மற்றும் ராஜ் மோகன் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் மட்டத்திலும் தேவையான ஒருங்கிணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தென்மாநிலங்களின் கூட்டு வளர்ச்சிக்கு முக்கியத்துவம்
மாநிலங்களின் பொதுவான தேவைகள் மற்றும் நீண்டகால வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து ஒரே மேடையில் ஆலோசிக்கப்படும் வாய்ப்பாக தென்மண்டல கவுன்சில் கூட்டம் அமைகிறது. அமித்ஷா தலைமையில் நடைபெறும் நாளைய கூட்டத்தில் முக்கிய முடிவுகள் மற்றும் புதிய ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் குறித்து எதிர்பார்ப்பு நிலவுகிறது.