ஒன்னு ஒண்ணுன்னு பார்த்தா மொத்த கூடாரமே காலி ஆகிடும்போல... அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சதன் பிரபாகரன் திடீரென தவெக-வில் ஐக்கியம்..!!!
அதிமுகவில் உட்கட்சி அதிருப்தி நீடிக்கும் நிலையில், பரமகுடி முன்னாள் எம்எல்ஏ சதன் பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதிமுகவில் அணிகள் இணைந்த பிறகும் உட்கட்சி அதிருப்தி முழுமையாக அடங்கவில்லை என்ற பேச்சு நிலவி வரும் நிலையில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் தொடர்ந்து தவெகவை நோக்கி நகர்ந்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பரமகுடி முன்னாள் எம்எல்ஏ சதன் பிரபாகரன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர் வின்சென்ட் ஆகியோர் இன்று தவெகவில் இணைந்துள்ளனர்.
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவுகள் சமீபத்தில் முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டாலும், பல்வேறு நிலைகளில் நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி நீடிப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்த சூழலில் நடந்துள்ள புதிய இணைப்பு அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.
தவெகவில் இணைந்த முக்கிய நிர்வாகிகள்
மே 28ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், பரமகுடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர் வின்சென்ட் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக தவெக கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். கட்சியின் முக்கிய நிர்வாகியான செங்கோட்டையன் முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக விற்கு இந்த நிலைமையா? எடப்பாடியை தலைமை பொறுப்பிலிருந்து மாற்றம்.... ஷாக் தகவல்!!!
அதிருப்தியே காரணமா?
அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைந்த பிறகும், மாவட்ட மற்றும் கீழ்மட்ட நிர்வாகிகள் மத்தியில் தலைமை தொடர்பான அதிருப்தி இன்னும் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே சில முக்கிய நிர்வாகிகள் மாற்றுக் கட்சிகளை நோக்கி செல்வதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு
தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இந்த கட்சி தாவல்கள், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு புதிய சவாலாக பார்க்கப்படுகின்றன. குறிப்பாக முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் பதவியாளர்கள் தவெகவில் இணைவது, வரவிருக்கும் அரசியல் சூழலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற விவாதம் தீவிரமடைந்துள்ளது. இந்த தகவல் சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: அதிமுகவில் இன்னும் அதிருப்தி அடங்கவில்லை! இபிஎஸ்-ஐ கழற்றிவிட துணியும் இரு தூண்கள்... அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு இதுதானா? பரபரப்பு தகவல்.!!!