அதிமுகவில் இன்னும் அதிருப்தி அடங்கவில்லை! இபிஎஸ்-ஐ கழற்றிவிட துணியும் இரு தூண்கள்... அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு இதுதானா? பரபரப்பு தகவல்.!!!
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையைச் சுற்றியுள்ள அதிருப்தி தீவிரமடைந்த நிலையில், சி.வி.சண்முகம் மற்றும் சி.வி.ஜயபாஸ்கர் தவெக நோக்கி நகர்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்புகள் மீண்டும் இணைந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், கட்சிக்குள் நிலவும் அதிருப்தி இன்னும் அடங்கவில்லை. குறிப்பாக முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம் மற்றும் சி.வி.ஜயபாஸ்கர் இணைப்பு நிகழ்வில் பங்கேற்காதது அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியின் முக்கிய தலைவர்கள் சிலர் தொடர்ந்து தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டு வருவது, அதிமுகவில் மீண்டும் உட்கட்சிப் பிரச்சினைகள் தலைதூக்குகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக விற்கு இந்த நிலைமையா? எடப்பாடியை தலைமை பொறுப்பிலிருந்து மாற்றம்.... ஷாக் தகவல்!!!
எடப்பாடி தலைமையில் அதிருப்தி?
தகவலின்படி, எடப்பாடி பழனிசாமியின் அணுகுமுறையில் அதிருப்தியடைந்த சி.வி.சண்முகம், சமீபத்திய அரசியல் நகர்வுகளால் மனவருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரை சமாதானப்படுத்த மூத்த நிர்வாகிகள் முயற்சி எடுத்ததாகவும், ஆனால் அந்த பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை என்றும் கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், விராலிமலையில் தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வரும் சி.வி.ஜயபாஸ்கர், அடுத்த கட்ட அரசியல் முடிவு குறித்து தீவிரமாக யோசித்து வருவதாக பேசப்படுகிறது.
இரண்டாம் கட்ட தலைவர்களின் அதிருப்தி
அதிமுகவில் முடிவெடுக்கும் அதிகாரம் ஒரே தரப்பிடம் மட்டுமே குவிந்து வருவதாகவும், சீனியர் தலைவர்களுக்கு போதிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்றும் கட்சிக்குள் அதிருப்தி நிலவி வருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் கட்சி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டதும் இந்த மனநிலையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், எதிர்கால அரசியல் வாய்ப்புகளை கருத்தில் கொண்டு சில முக்கிய நிர்வாகிகள் மாற்று அரசியல் பாதைகளை ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெக நோக்கி நகரும் அதிமுக முகங்கள்?
இந்த சூழலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் மீது அதிமுக நிர்வாகிகளின் கவனம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சில முன்னாள் நிர்வாகிகளும், எம்எல்ஏக்களும் தவெகவில் இணைந்திருப்பது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெகவின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா, தவெகவை “புதிய அதிமுக” என்று குறிப்பிட்டிருந்த நிலையில், பழைய அதிமுக நிர்வாகிகளை தங்களுடன் இணைக்கும் முயற்சிகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதற்கிடையில், சி.வி.சண்முகம் மற்றும் சி.வி.ஜயபாஸ்கர் இருவரும் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணையலாம் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இதுகுறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமியை சந்திக்காமல் ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருவது அரசியல் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
வடக்கு மற்றும் மத்திய தமிழகத்தில் செல்வாக்கு கொண்ட இந்த இரு தலைவர்களும் அதிமுகவிலிருந்து விலகினால், அது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கு பெரிய பின்னடைவாக அமையும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: அதிமுகவில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! திடீரென ராஜினாமா செய்த 3 எம்.எல்.ஏக்கள்.... செம ஷாக்கில் இபிஎஸ்.!!!