அதிமுகவில் காலை, மாலை இருவேளையிலும் அடுத்தடுத்து விலகல்! கட்டு கட்டாக சரியும் அதிமுக.... திக்குமுக்காடும் எடப்பாடி...!!!
அதிமுகவில் தொடர்ந்து நடைபெறும் நிர்வாகிகள் விலகல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், புதுக்கோட்டை மாநகர செயலாளர் பதவியில் இருந்து அப்துல் ரகுமான் விலகுவதாக அறிவித்துள்ளார்.
அதிமுகவில் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வரும் நிலையில், தற்போது புதுக்கோட்டை மாநகர செயலாளர் பதவியில் இருந்து அப்துல் ரகுமான் விலகுவதாக அறிவித்துள்ளார். இன்று காலை திருவள்ளூர் முன்னாள் எம்பி வேணுகோபால் கட்சியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனால், நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக வட்டாரத்தில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மூத்த நிர்வாகிகளின் தொடர்ச்சியான விலகல் கட்சித் தொண்டர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவில் 39 வருடங்களாக உழைத்த முக்கிய புள்ளி விலகல்! மிகுந்த மனவேதனையுடன் எடுத்த திடீர் முடிவு! செம ஷாக்கில் எடப்பாடி!
சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிவிப்பு
புதுக்கோட்டை மாநகர செயலாளராக இருந்த அப்துல் ரகுமான், தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 35 ஆண்டுகளாக தன்னுடன் பயணித்த கட்சியினருக்கும், இந்த பொறுப்பை வழங்கிய தலைமைக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்.
அவரது பதிவு அதிமுக வட்டாரத்தில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, நீண்ட காலமாக கட்சியில் செயலில் இருந்தவர் திடீரென பொறுப்பில் இருந்து விலகியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
விஜயபாஸ்கரின் நெருக்கமானவர்
முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அணியில் முக்கிய நபராக கருதப்பட்டவர் அப்துல் ரகுமான். அவரின் நெருங்கிய ஆதரவாளராகவும், பல்வேறு கட்சி நடவடிக்கைகளில் இணைந்து செயல்பட்டவராகவும் அறியப்பட்டார்.
இதையடுத்து, அதிமுகவில் நடைபெற்று வரும் இந்த தொடர் விலகல்களுக்கு பின்னால் என்ன காரணம் என்ற விவாதம் அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. தேர்தல் சூழ்நிலையில் நிகழும் இந்த மாற்றங்கள் கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளிலும் தாக்கம் ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: BREAKING: அதிமுகவின் புதிய 'போர்வாள்' அறிமுகப்படுத்திய எடப்பாடி பழினிசாமி...!!!