BREAKING: அதிமுகவின் புதிய 'போர்வாள்' அறிமுகப்படுத்திய எடப்பாடி பழினிசாமி...!!!
அதிமுகவில் உட்கட்சி மாற்றங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி ‘போர்வாள்’ என்ற புதிய அதிகாரப்பூர்வ நாளேட்டை அறிமுகப்படுத்தியுள்ளார்.
அதிமுகவில் உட்கட்சி அரசியல் பரபரப்பு நீடித்து வரும் சூழலில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி புதிய அதிகாரப்பூர்வ நாளேட்டை அறிமுகப்படுத்தியுள்ளார். ‘நமது அம்மா’ நாளிதழ் சி.வி. சண்முகத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றதைத் தொடர்ந்து, ‘போர்வாள்’ என்ற பெயரில் புதிய நாளேடு தொடங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அதிமுக வட்டாரத்தில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.
சென்னையில் நடந்த அறிமுக நிகழ்ச்சி
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி புதிய நாளேட்டை வெளியிட்டார். கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் இதில் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: BREAKING: சற்று முன்.... அடுத்தடுத்து அதிமுகவில் பதவி பறிப்பு! அதிமுகவின் முக்கிய நிர்வாகியை அதிரடியாக நீக்கிய எடப்பாடி!!!
அதிமுகவின் அரசியல் நிலைப்பாடுகள், கட்சிச் செய்திகள் மற்றும் தலைமையின் கருத்துகளை நேரடியாக தொண்டர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
‘போர்வாள்’ மூலம் புதிய அரசியல் பிரசாரம்
உட்கட்சி மாற்றங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், புதிய ஊடக தளமாக இந்த நாளேடு பார்க்கப்படுகிறது. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி தலைமையின் அரசியல் அணுகுமுறைகள் மற்றும் கட்சியின் எதிர்கால திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் கருவியாக ‘போர்வாள்’ அமையும் என அதிமுக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து, அதிமுகவின் தகவல் பரப்பல் மற்றும் ஊடக அரசியலில் புதிய கட்டம் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதையும் படிங்க: அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்த முக்கிய புள்ளி! செம ஷாக்கில் எடப்பாடி!!!