Cough Problems: குளிர்காலத்தில் சளி, இருமல் தொல்லையா? நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்.!
Winter Season Cough Problems & Solution: ஒவ்வொரு குளிர்காலமும் பலருக்கும் சளி, இருமல் தொல்லை என்பது அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது நல்லது.
உடல் நலத்தினை பராமரிப்பது, குளிர்காலத்தில் பிற நோய்களில் இருந்து நம்மை நாமே தற்காத்துக்கொள்வது நல்லது. அதற்கு உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முக்கியம்.
சளி, இருமல், தொண்டை வலி, வைரஸ் காய்ச்சல் தொற்றுகள் குளிர்காலத்தில் பொதுவாக அதிகமாக இருக்கும். இந்த சமயத்தில் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. மசாலா, மூளை, விதை, வேர்கள் போன்றவற்றை வெந்நீரில் சேர்த்து குடிப்பது நல்ல பலனை தரும். இது நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், செரிமானம் மேம்படவும், சுவாச மண்டலம் இயல்பான வேலையை செய்யவும் உதவும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹெர்பல் டீ நல்லது.
இஞ்சி டீ:
ஆண்டி-பாக்டீரியல், ஆண்டி-இன்பலோமேட்டரி பண்புகளை கொண்ட இஞ்சி நெஞ்சு சளியை குறைக்கும். தொண்டை எரிச்சலை தனித்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். உடலை வெப்பமாக வைக்கவும், செரிமானம் மேம்படவும் இஞ்சி உதவும். சளி பிடிக்கும் ஆரம்ப அறிகுறிகள் இருந்தால், இஞ்சி டீ நல்லது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு வைரஸ் பரவல்.. வைரஸின் அறிகுறிகள் என்ன?.. எதிர்கொள்வது எப்படி?.!
துளசி டீ:
'மூலிகைகளின் ராணி' என வருணிக்கப்படும் துளசி சக்திவாய்ந்த அடாப்டோஜென் கொண்டது ஆகும். இது பருவகால பாக்டீரியா தொற்றுகளுக்கு எதிராக உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். குளிர்காலத்தில் ஏற்படும் இருமல், சளியை கட்டுப்படுத்தும். தொடர் இருமலை கட்டுப்படுத்தி, சுவாச மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பாக்டீரியா, வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க உதவும்.
மஞ்சள் டீ:
குர்குமின் நிறைந்த மஞ்சள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடல் வீக்கம் குறைக்கும். நோய்தொற்றுகளை எதிர்த்து போராடி உடல்நல பாதிப்புகளை குறைக்கும். மூட்டு வலி குறையும். உடல் பாதிப்புகளில் இருந்து விரைந்து குணமாகும் சக்தியை தரும். குளிர்கால மூட்டுவலிக்கு மஞ்சள் டீ நல்லது.
கிரீன் டீ:
ஆண்டி-ஆக்சிடன்ட் நிறைந்த கிரீன்-டீ நோய்தொற்றுகளில் இருந்து உடலை பாதுகாக்கும். உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வளர்சிதை மாற்றம் மேம்படும். உடலில் சோர்வு ஏற்படாத வண்ணம் ஆற்றலை வழங்கும். குளிர்காலத்தில் உடல்நலனை பராமரிக்க சிறந்தது கிரீன் டீ ஆகும்.
இதையும் படிங்க: 'மழைநீரில் வெறும் காலில் நடக்காதீங்க'.. வைரஸ் அபாயம்.. தமிழக சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை.!