பச்சிளம் குழந்தைகளுக்கு செல்போன் காண்பிக்க கூடாது ஏன்? பெற்றோர்களே ஜாக்கிரதை.. தெரிஞ்சிக்கோங்க.!
Parenting Tips for 12 Month Baby: குழந்தையின் வளர்ச்சியை மொபைல் செல்போன் பாதிக்கும்.
செல்போன் அதிகமாக பார்த்தால் குழந்தையின் திறன் பாதிக்கப்படும். அதுகுறித்த தகவலை விரிவாக காணுங்கள்.
கற்றல், கவனம்:
Child Mobile Use: புதிதாக பிறந்த குழந்தைகள் தங்களின் ஒரு வயதை சந்திக்கும்போது, அவர்களின் மூளை வேகமாக வளரும் நிலையில் இருக்கும். இந்த சமயத்தில் சுற்றுப்புறத்தை தொடுதல், ஒலியை கேட்டல், முகபாவனையை கவனித்தல் என ஒவ்வொன்றையும் கற்றுக்கொள்ளும். ஆனால், குழந்தைகள் செல்போனை தொடர்ந்து பார்க்கும்போது, அவர்களின் அனுபவம் சார்ந்த உலகம் என்பது குறையும். இதனால் அவர்களின் சிந்தனைத்திறன், கவனம், கற்றல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். இது குழந்தையை மறைமுகமாக பாதிக்கும்.
இதையும் படிங்க: பீங்கான் கப்பில் தேநீர் குடிப்பது பாதுகாப்பானதா? ஷாக் தகவல் சொல்லும் மருத்துவர்கள்.!
மொழி வளர்ச்சி:
12 மாத குழந்தை ஒலியை பின்பற்றி சர்ச்சையை புரிந்துகொள்ளும். பெற்றோரையும், அவர்களின் முகபாவனையையும் கண்டு கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும். இந்த சமயத்தில் செல்போனில் அதிகம் வீடியோ காட்டுவது, மனிதர்களுடன் கொண்ட தொடர்பை குறைக்க காரணமாக அமையும். குழந்தையின் பேச்சுத்திறனும் பாதிக்கப்படும். பெற்றோருடன் பேசுவது, பாடுவது, கதைகள் சொல்வது மொழி வளர்ச்சிக்கு முக்கியம் ஆகும்.
கண்களை பாதிக்கும்:
இந்த சமயத்தில் அவர்களுக்கு தூக்கமும் அவசியமானது ஆகும். செல்போன் திரையில் இருந்து வெளியேறும் வெளிச்சம் குழந்தையின் தூக்க சுழற்சியை பாதிக்கும். இரவில் திரை பார்க்கும் பழக்கம் இருந்தால், சீரான தூக்கம் என்பது கேள்விக்குறியாகும். இது உடல் வளர்ச்சி, மனவளர்ச்சியை பாதிக்கும். கண்களின் வளர்ச்சி பாதிக்கப்படும் பட்சத்தில் கவனச்சிதறல் ஏற்படும். இயற்கையான பொருட்கள், மனிதர்களின் முகம், சுற்றுப்புற அசைவை பார்ப்பது ஆரோக்கியமான பார்வைக்கு முக்கியம் ஆகும்.
நேரத்தை செலவிடுங்கள்:
அதேபோல, பெற்றோரின் சிரிப்பு, குரல், தொடுதல் போன்றவை மூலமாக பாதுகாப்பு உணர்வும் உருவாகும். செல்போனில் அதிகம் மூழ்கி இருந்தால் உணர்ச்சி சார்ந்த தொடர்பு மந்தமாகும். இது உணர்ச்சியை வெளிப்படுத்துவதில் மாற்றத்தை ஏற்படுத்தும். பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அமைதியாக வைத்திருக்க செல்போன் எளிய தீர்வு என நம்ப கூடாது. நீண்ட காலத்தில் அது மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும். அதனால் குசந்தைகளுக்கு செல்போனை கொடுக்காமல் அவர்களுடன் நேரத்தை செலவிட்டு அவர்களை வளர்ப்பது நல்லது.
இதையும் படிங்க: #Breaking: கழுத்து எலும்பு உடைக்கப்பட்டு., +2 மாணவி வன்கொடுமை கொலை.. பிரேத பரிசோதனையில் ஷாக் தகவல்.!