×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வரமாட்டேங்குதா..? இதை செய்து பாருங்கள்.! நிம்மதியா தூக்கம் வரும்.!

Tips for better sleep at night time

Advertisement

மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்று சரியான தூக்கம். வளர்ந்துவரும் இந்த நாகரிக உலகில் பலருக்கும் சரியா தூங்குவதற்கு கூட நேரம் கிடைப்பது இல்லை. ஒரு மனிதன் குறைந்தபட்சம் 8 மணி நேரம் தூங்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

சரியான நேரத்திற்கு தூங்கி எழுந்தாலே நமது உடலில் பாதி நோய்கள் வராது. தூங்க நேரம் கிடைக்கவில்லை என்பதையும் தாண்டி, படுத்தால் தூக்கம் வரமாட்டேங்குதுனு புலம்புபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களுக்கு உதவும் சில டிப்ஸ் குறித்து இங்கு பார்க்கலாம் வாங்க.

தேன் மிகவும் மருத்துவகுணம் வாய்ந்த ஒன்று. இரவுசாப்பிட பிறகு, ஒரு தேக்கரண்டி தேன் மட்டும் சாப்பிட்டு வந்தால் நன்றாகத் தூக்கம் வரும். அல்லது மாலையில் 2 ஸ்பூன் தேன் மட்டும் சாப்பிட்டு, இரவில் வேறு ஒன்றும் சாப்பிடாமல் இருந்தால் நன்றாக தூங்க முடியும்.

வெங்காயத்தை நெய் விட்டு வதக்கிச் சாதத்தோடு பிசைந்து சாப்பிட்டு வந்தால் தூக்கம் நன்றாக வரும்.வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் எளிதில் தூக்கம் வரும். 

சிறிது கசகசா, 2 முந்திரிப்பருப்பு சேர்த்து அரைத்துப் பாலில் கலந்து கொதிக்கவைத்து அதனுடன் சிறிது கல்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும். இதை தொடர்ந்து 10 நாட்களாவது செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சீரகத்தை வறுத்து பொடி செய்து வாழைப்பழத்துடன் சாப்பிட்டு வந்தால் சுகமான தூக்கம் எளிதில் வரும். கெட்டித் தயிருடன் சிறிது உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் தூக்கம் நன்றாக வரும். அரைக்கீரை,சீரகம் சேர்த்து கஷாயமாக செய்து குடித்து வந்தால் தூக்கமின்மை குறையும்.

ஜாதிக்காய் பொடியுடன்,நெல்லிக்காய் சாறு சேர்த்து கலந்துச் சாப்பிட்டால் தூக்கமின்மை குறையும். வெள்ளரி விதைகளை அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் தூக்கமின்மை குறையும். இரவு உணவில் அவரைக்காயை சேர்த்துக் கொண்டால் தூக்கமின்மை குறையும். ஆரஞ்சு பழச்சாற்றில் தேனைக் கலந்து குடித்து வந்தால் நன்றாக தூக்கம் வரும். 

சப்போட்டா பழம் சாப்பிட்டு வந்தால் இரவில் நன்றாக தூக்கம் வரும்.மணலிக்கீரை,துளசி,வில்வம் இலை மூன்றையும் பொடியாக்கி தினமும் இரவு நேரத்தில் சாப்பிட்டு வந்தால் நன்றாக தூக்கம் வரும்.

பேரீட்சை, கேரட், முருங்கை, ஆப்பிள், எலுமிச்சை, திராட்சை, தேங்காய்ப்பால், கொத்தமல்லி, நெல்லிக்காய் இவைகளில் ஏதேனும் ஒன்றை சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை குறையும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#health tips #Better sleep
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story